புது கண்ணம்மா வினுஷாவை பார்த்து பயந்த சீரியல் இயக்குனர் – ‘பாரதி கண்ணம்மா’ பென்னட் ஓபன் டாக்!

0
புது கண்ணம்மா வினுஷாவை பார்த்து பயந்த சீரியல் இயக்குனர் - 'பாரதி கண்ணம்மா' பென்னட் ஓபன் டாக்!
புது கண்ணம்மா வினுஷாவை பார்த்து பயந்த சீரியல் இயக்குனர் - 'பாரதி கண்ணம்மா' பென்னட் ஓபன் டாக்!
புது கண்ணம்மா வினுஷாவை பார்த்து பயந்த சீரியல் இயக்குனர் – ‘பாரதி கண்ணம்மா’ பென்னட் ஓபன் டாக்!

பாரதி கண்ணம்மா தொடரின் இயக்குனர் பிரவீன் பென்னட் தனது சீரியலில் நடிக்கும் நடிகர்களை பற்றி தனது மனைவியுடன் சேர்த்து அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் பிரவீன்:

விஜய் டிவியின் மிகப் பெரிய ஹிட் சீரியலை இயக்கி உள்ளவர் இயக்குனர் பிரவீன் பென்னட். இவர் இயக்கத்தில் வந்தாலே அந்த சீரியல் மக்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகி விடுகிறது. தற்போதும் விஜய் டிவியின் மூன்று முக்கிய மூன்று தொடர்களான ராஜா ராணி 2, பாரதி கண்ணம்மா மற்றும் நம்ம வீட்டு பொண்ணு ஆகியவை பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் பிரவீனின் மகனுக்கு முதல் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகிய காரணத்தை ஒத்துக் கொண்ட அகிலன் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

இந்த நிகழ்ச்சியில் அனைத்து சின்னத்திரை நட்சத்த்திரங்களும் கலந்து கொண்டனர். இந்த போட்டோக்கள் இணையம் முழுவதும் பரவி வந்தது. இதன் பிறகு, தனது மனைவியுடன் இயக்குனர் அளித்துள்ள பேட்டி பல தளங்களிலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் தனது சீரியலில் அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்கள் பற்றிய கேள்விக்கு அளித்துள்ள பதில் வித்தியாசமாக உள்ளது. அதில் தான் எப்போதும் தனது கதையின் மேல் அதிக நம்பிக்கை வைப்பதாகவும், அதனால் தொடரை பற்றிய பயம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

பிரசவத்திற்கு பின் சர்ச்சை பாடலுக்கு ஆடியுள்ள ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!

ஆனால் புதிதாக கண்ணம்மாவாக நடிக்க வரும் நடிகை வினுஷா சரியாக நடிப்பாரா, கதையை புரிந்து கொள்வாரா இது இவருக்கு செட் ஆகுமா என்ற பயம் தனக்கு இருந்ததாக கூறியுள்ளார். மேலும், அடிக்கடி சீரியலில் மாற்றங்கள் வந்தால் அதை பற்றி கவலை படமாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதனால் இவர் எப்போதும் டென்ஷன் ஆவதில்லை என்று அவரது மனைவியும் கூறியுள்ளார். எப்போதும் தனக்கு புது முகங்களை அறிமுகப்படுத்தி அவர்கள் நடிப்பதை பார்க்க ஆர்வம் அதிகமாக இருப்பதாகவும், இதனால் தான் தனது சீரியலில் அதிக புதுமுக நடிகர்கள் இருப்பதாகவும் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!