பிரசவத்திற்கு பின் சர்ச்சை பாடலுக்கு ஆடியுள்ள ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!

0
பிரசவத்திற்கு பின் சர்ச்சை பாடலுக்கு ஆடியுள்ள 'பாரதி கண்ணம்மா' வெண்பா - ரசிகர்கள் உற்சாகம்!
பிரசவத்திற்கு பின் சர்ச்சை பாடலுக்கு ஆடியுள்ள 'பாரதி கண்ணம்மா' வெண்பா - ரசிகர்கள் உற்சாகம்!
பிரசவத்திற்கு பின் சர்ச்சை பாடலுக்கு ஆடியுள்ள ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா – ரசிகர்கள் உற்சாகம்!

பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஃபரீனா தனது பிரசவத்திற்கு பின்னர் தற்போது பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெண்பாவின் நடனம்:

தற்போது சின்னத்திரையில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் சின்னத்திரை நடிகை ஃபரீனா தான். அவர் தான் ஏற்று நடிக்கும் பாரதி கண்ணம்மா தொடரின் வில்லியான வெண்பா கதாபாத்திரத்திற்காக பல மெனக்கெடல்களை செய்துள்ளார். இதனால் பெரும் புகழையும் அடைந்துள்ளனர். சின்னத்திரையின் நம்பர் 1 வில்லி என்ற பெருமையையும் அடைந்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் சீரியலில் வரும் அனைவரையும் மிரட்டக் கூடிய வகையில் நடித்திருப்பார். தனது கர்ப்ப காலத்தில் கூட இடைவெளி இல்லாமல் தொடரில் நடித்து வந்தார்.

மீண்டும் இணைந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அகிலன் & அஞ்சலி – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

தனது பிரசவத்திற்கு சில நாட்கள் முன்பு வரையிலும் கூட படப்பிடிப்பில் கலந்து கொண்டார். கடந்த மாதம் ஃபரீனாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிரசவம் முடிந்த சில நாட்களிலேயே தனது பணிக்கு திரும்பியுள்ளார் ஃபரீனா. இதனால் விரைவில் சீரியலில் அவர் வரும் காட்சிகள் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில், தான் வழக்கமாக மேற்கொள்ளும் மேக்கப் போட்டோஷூட்களிலும் ஃபரீனா கலந்து கொள்ள தொடங்கியுள்ளார்.

‘பாக்கியலட்சுமி’ இனியா தோழி தற்கொலைக்கு காரணமான ஆசிரியரை அடிக்கும் எழில் – அனல் பறக்கும் எபிசோட்!

இதற்கான போட்டோக்கள் அவ்வப்போது வெளிவரும் நிலையில், தற்போது கோலிவுட்டின் ஹாட் பாடலாக உள்ள புஷ்பா திரைப்படத்தின் “ஓ சொல்றியா மாமா” பாடலுக்கு ஃபரீனா நடனமாடி உள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பிரசவத்திற்கு பிறகும் இந்த அளவு நடனம் ஆடுகிறார் என்று அவரை மிகவும் புகழ்ந்துள்ளனர். மேலும், வீடியோவை பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதிக லைக்குகளை பெற்று வருவதால் இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!