மீண்டும் சீரியலில் கர்ப்பமான கண்ணம்மா? யாருடைய கனவு இது – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
மீண்டும் சீரியலில் கர்ப்பமான கண்ணம்மா? யாருடைய கனவு இது - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
மீண்டும் சீரியலில் கர்ப்பமான கண்ணம்மா? யாருடைய கனவு இது - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
மீண்டும் சீரியலில் கர்ப்பமான கண்ணம்மா? யாருடைய கனவு இது – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், விறுவிறுப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கண்ணம்மா மீண்டும் கர்ப்பமாக இருப்பது போல புகைப்படம் வெளியான நிலையில் அடுத்து என்ன மாதிரியான திருப்பங்கள் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் பழைய கண்ணம்மா ரோஷினி விலகியதற்கு பின் சூடு பிடித்துள்ளது. புதிதாக கண்ணம்மாவாக களமிறங்கி இருக்கும் வினுஷா தேவி தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் கதையில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அதில் பாரதி கண்ணம்மா உடன் சேர்ந்து வாழ்ந்து வர குழந்தைகள் சௌந்தர்யாவிடம் இருக்கின்றனர். பாரதி கண்ணம்மாவை தொல்லை செய்து 6 நாளில் வீட்டை விட்டு போக சொல்வேன் என சவால் விட்டு இருக்கிறார்.

Vijay TV Bigg Boss 5 Promo | டாஸ்கில் பயங்கரமாக முட்டிக் கொள்ளும் ப்ரியங்கா & நிரூப் – சூடு பிடிக்கும் பிக்பாஸ் வீடு!

குழந்தைகள் போல சின்ன சின்ன விஷயங்களுக்கு அவர் சண்டை போட அதை எல்லாம் பார்க்க நகைச்சுவையாக இருக்கிறது. மேலும் அஞ்சலியை கடத்தியது யாரு என கண்டுபிடிக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. வெண்பாவை வெளியே எடுக்க சாந்தி பல முயற்சிகளை செய்ய அதை எல்லாம் மாயாண்டி தடுத்து அவரிடம் பணம் வாங்க பார்க்கிறார். இப்படி கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் புதிய திருப்பமாக கண்ணம்மா மாசமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

வருண் சத்யா பிரச்சனைக்கு ஷீலா தான் காரணம், உண்மையை அறிந்த மனோகர் – வெளியான “மௌன ராகம் 2” ப்ரோமோ!

அதை பார்த்த ரசிகர்கள் பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ்ந்து கண்ணம்மா மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். அதனால் சீரியல் சீக்கிரம் முடிய போகுது என பல வதந்திகள் கிளம்பின. ஆனால் அப்படி ஒன்றும் இல்லை கண்ணம்மா கர்ப்பமாக இருப்பது போல வந்தது கண்டிப்பாக கனவாக தான் இருக்கும். ஆனால் இந்த கனவு பாரதிக்கு வந்ததா இல்லை கண்ணம்மாவிற்கு வந்ததா இல்லை சௌந்தர்யாவுக்கு வந்ததா என தெரியவில்லை. இனி வரும் எபிசோடுகளில் அதற்கான விடை தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!