வருண் சத்யா பிரச்சனைக்கு ஷீலா தான் காரணம், உண்மையை அறிந்த மனோகர் – வெளியான “மௌன ராகம் 2” ப்ரோமோ!
விஜய் டிவி “மௌன ராகம் 2” சீரியலில் சத்யா 12 மணி நேரம் பாடி தனது அன்பு உண்மை என்பதை வருணிடம் நிரூபித்து இருக்கிறார். இந்நிலையில் இவ்வளவு பிரச்சனைக்கும் ஷீலா தான் காரணம் என மனோகர் கண்டுபிடிக்க அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
மௌன ராகம் ப்ரோமோ:
மௌன ராகம் 2 சீரியலில், வருண் சத்யா மீது பாசமாக இருப்பதை பார்த்த ஷீலா பிடிக்காமல் இருவரையும் பிரிக்க நினைக்கிறார். அப்போது வருணிற்கு போன் செய்து சத்யா அவங்க அம்மா ஆப்ரேஷனுக்கு பணம் தேவை என்பதால் அவள் பணத்திற்காக தான் உன்னை திருமணம் செய்து கொண்டால் என சொல்ல வருண் சத்யா மீது வெறுப்பை காட்டுகிறார். சத்யா வருண் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என தெரியாமல் இருக்கிறார்.
உண்மையை சொல்லி திருமணம் செய்ய போராடும் தமிழ், சரஸ்வதி – அடுத்த வார எபிசோட்!
வருண் இப்படி நடந்து கொள்வது மனோகர் மற்றும் தருணிற்கு வித்தியாசமாக இருந்தது. என்ன காரணம் என கேட்க எனக்கு இங்க இருக்கவே பிடிக்கவில்லை நான் தனியாக இருக்க போகிறேன் என சொல்கிறார் வருண். அப்படி என்ன நடந்தது என கேட்க பணத்திற்காக தான என்னை சத்யா திருமணம் செய்து கொண்டால் என சொல்ல அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அதனால் உங்களது பணத்தை திருப்பி கொடுத்து என்னுடைய அன்பு உண்மை என நிரூபிப்பேன் என்று சத்யா வருணிடம் சொல்கிறார்.
‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து நடிகர் செந்தில் விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி!
அதற்காக பாடல் போட்டியில் கலந்து கொண்ட சத்யாவை பாட விடாமல் செய்ய பல வேலைகளை ஷீலா செய்கிறார், ஆனாலும் சத்யா வெற்றி பெற்று தனது அன்பை நிரூபித்து விடுகிறார். இந்நிலையில் ஷீலா தான் வருணிடம் சத்யா பணம் வாங்கியதை சொன்னார் என்பதை தெரிந்து மனோகர் கோபப்படுகிறார். என்னுடைய பையன் சதோசத்திற்கு இடையூறாக யாரு இருந்தாலும் நான் சும்மா இருக்கமாட்டேன் என மனோகர் சொல்ல, என் பையன் சந்தோசத்தை கெடுக்க நினைத்த நீ இனிமேல் இந்த வீட்டில் இருக்க கூடாது என மனோகர் அவரை தள்ளிவிடுகிறார். அவரை சத்யா பிடிக்க இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.