குழந்தை பிறக்கும் தருவாயில் அஞ்சலியை கொலை செய்யும் வெண்பா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
குழந்தை பிறக்கும் தருவாயில் அஞ்சலியை கொலை செய்யும் வெண்பா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
குழந்தை பிறக்கும் தருவாயில் அஞ்சலியை கொலை செய்யும் வெண்பா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
குழந்தை பிறக்கும் தருவாயில் அஞ்சலியை கொலை செய்யும் வெண்பா? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது பிரசவ காலத்தை நெருங்கி உள்ள அஞ்சலிக்கு வெண்பா பிரசவம் பார்க்க இருப்பதாகவும், அப்போது குழந்தையையும், அஞ்சலியையும் கொல்வதற்கு முயற்சிகளை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெண்பா கொலை முயற்சி:

பாரதி கண்ணம்மா தொடரில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களான கண்ணம்மா மற்றும் வெண்பா இருவரும் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளிவந்து பரபரப்பை கிளப்பியுள்ளது. அதே நேரத்தில் தொடரிலும் மிகவும் திருப்பங்களை உடைய காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. கதையின் திருப்புமுனையாக உள்ள காட்சிகள் தற்போது வரும் நிலையில், இனி வரும் நாட்களில் இதை விட கூடுதல் திருப்பங்கள் மற்றும் விறுவிறுப்பான சம்பவங்கள் நடக்க உள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ வில்லி பரினாவிற்கு பதில் வேறு நடிகையா? சீரியலில் இருந்து விலகலா? உண்மை நிலவரம்!

அஞ்சலியை சந்தோசமாக வாழ விடக்கூடாது என்று வெண்பா, அஞ்சலியின் ஆரம்ப கட்ட கர்ப்ப காலத்தில் அவருக்கு தவறான மருந்துகளை கொடுத்து சாப்பிட சொல்வார். இதனால் அஞ்சலியின் உடல்நிலை ஏற்கனேவே மோசமாக இருந்த நிலையில், வெண்பா கொடுத்துள்ள மருந்துகளின் காரணமாக மேலும் சிக்கலாகிறது. தற்போது வெண்பா சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ய முயன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் கண்ணம்மா, துளசி மற்றும் பாரதியின் குடும்பத்தினர் அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

பிக்பாஸ் வீட்டை விட்டு நமீதா மாரிமுத்து வெளியேறியதற்கான உண்மை காரணம் – அவரே வெளியிட்ட தகவல்!

வெண்பா சிறையில் இருக்கும் போது பார்க்க சென்று பாரதியிடம் கண்ணம்மா தான் இதற்கெல்லாம் காரணம் என்று வெண்பா கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த பாரதி கண்ணம்மாவிற்கு விவாகரத்து பத்திரத்தை அனுப்புகிறார். இப்படி இருக்கையில், திடீரென்று அஞ்சலிக்கு பிரசவ வலி ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் அஞ்சலி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். ஆனால் அப்போது சிறையில் இருந்து வெளியில் வந்திருக்கும் வெண்பா அஞ்சலிக்கு பிரசவம் பார்க்கும் படியான சூழல் வந்து விடுவதாகவும், அப்போது அஞ்சலியை வெண்பா கொலை செய்து விடுவது போன்ற காட்சிகள் வர உள்ளது. இதனால் இனி கதையில் அடுத்தடுத்த காட்சிகளில் ட்விஸ்ட்கள் நிறைந்திருக்கும் என்பது உறுதியாகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!