“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகிய ரோஷினி வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!

0
"பாரதி கண்ணம்மா" சீரியலில் இருந்து விலகிய ரோஷினி வெளியிட்ட புகைப்படம் - ரசிகர்கள் உற்சாகம்!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகிய ரோஷினி வெளியிட்ட புகைப்படம் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து விலகிய ரோஷினி தற்போது தன்னுடைய வீட்டு மொட்டை மாடியில் எளிமையாக எடுத்த போட்டோஷூட் ஒன்று ட்ரெண்டாகி இருக்கிறது.

கண்ணம்மா ரோஷினி:

பாரதி கண்ணம்மா சீரியல் 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. டாப் 10 சீரியல்கள் வரிசையில் இந்த சீரியல் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்த சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் தொடக்கத்தில் இருந்தே அருண் பிரசாத் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிபிரியன் நடித்து வந்தார். அவரை கண்ணம்மாவாக ஏற்றுக் கொண்ட மக்கள் அதிகமான ஆதரவை கொடுத்து வந்தனர்.

‘குக் வித் கோமாளி’ சீசன் 3 இல் விஜி, அர்ச்சனாவுடன் ‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி – ரசிகர்கள் உற்சாகம்!

ஆனால் இந்த சீரியல் முன்னணி சீரியல்களில் இருக்கும் இந்த நேரத்தில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் இருந்து ரோஷினி விலகுவதாக அறிவித்தார். அவருக்கு இந்த சீரியலில் நடிப்பதால் பல சினிமா வாய்ப்புகள் தவறவிட்டுள்ளதால் சீரியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். அதனால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி சாயலில் இருக்கும் வினுஷா தேவி நடித்து வருகிறார். வினுஷா தன்னுடைய நல்ல நடிப்பை வெளிப்படுத்தி வருவதால் அவரை கண்ணம்மாவாக ரசிகர்கள் பார்க்க தொடங்கி இருக்கின்றனர்.

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றியது ஏன்? வனிதா விஜயகுமார் ஆவேசம்!

இந்நிலையில் சீரியல் தொடர்ந்து டாப் வரிசையில் இருந்தாலும் ரோஷினியை கண்ணம்மா கதாபாத்திரத்தில் பார்க்க முடியாததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். ரோஷினி இன்னும் எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருப்பதால் அவரை பற்றிய செய்திகள் எதுவும் வெளியே வராமல் இருக்கிறது. தற்போது ரோஷினி தனது வீட்டின் மொட்டை மாடியில் எளிமையாக முறையில் எடுத்த போட்டோஷூட் ஒன்று வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!