விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” ஹேமா யார் தெரியுமா? அசர வைக்கும் சினிமா பயணம்! ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" ஹேமா யார் தெரியுமா? அசர வைக்கும் சினிமா பயணம்! ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” ஹேமா யார் தெரியுமா? அசர வைக்கும் சினிமா பயணம்! ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், ஹேமா கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் லிஷாவின் சினிமா பயணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மனம் கவர்ந்த முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் கண்ணம்மாவிற்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. பிறந்த அடுத்த நிமிடமே கருப்பாக இருக்கும் குழந்தையை மாமியார் சௌந்தர்யா பிரித்து சென்று பாரதியிடம் கொடுத்து வளர்க்கிறார். அந்த குழந்தைக்கு ஹேமா என பெயர் வைக்கப்பட்டு பாசமாக வளர்க்கப்படுகிறது. ஹேமா கதாபாத்திரத்தில் முகம் எல்லாம் கருப்பு சாயத்தை பூசி அவர் தன்னுடைய அசாதாரணாமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

தனது பெயரை மாற்றிய ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா – இவ்வளவு காதலா? வியக்கும் ரசிகர்கள்!

இவர் ஜீ தமிழ் டிவி ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சி மூலமாக தொலைக்காட்சிக்கு அறிமுகமானவர். இவரது சொந்த ஊர் கோயம்பத்தூர். இவருக்கு தற்போது 11 வயது ஆகிறது. இவர் கோயம்பத்தூரில் உள்ள நேஷனல் மாடல் பள்ளியில் படித்து வருகிறார். அவர் சிறு வயதில் இருந்தே டிவியில் வரும் காட்சிகளை அம்மாவிடம் நடித்து காட்டுவாராம். அதனால் அவரது அம்மா டிவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செய்துள்ளார். அதன் மூலம் அவர் பிரபலமானார். அதன் பின் அவர் ஜீ தமிழ் யாரடி நீ மோகினி சீரியலில் நடிக்க தொடங்கினார்.

சிபி மீது இருந்த கோவத்தில் பொருட்களை உடைத்த அக்ஷரா – கலவரமாகும் பிக்பாஸ் வீடு!

அதன் பின் அதே டிவியில் மெல்ல திறந்தது கதவு சீரியலில் நடிக்க தொடங்கினார். மேலும் குழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டுள்ளார். தற்போது அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் பிரபலமானார். மேலும் பல விளம்பர படங்களில் அவர் நடித்திருக்கிறார். அவர் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!