“பாரதி கண்ணம்மா” பரீனாவை வயிற்றுக்குள் இருந்து உதைக்கும் குழந்தை – வெளியான வீடியோ!

0
"பாரதி கண்ணம்மா" பரீனாவை வயிற்றுக்குள் இருந்து உதைக்கும் குழந்தை - வெளியான வீடியோ!
“பாரதி கண்ணம்மா” பரீனாவை வயிற்றுக்குள் இருந்து உதைக்கும் குழந்தை – வெளியான வீடியோ!

விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் கொடூரமான வில்லியாக காட்டப்படும் நடிகை பரீனாவிற்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தை வயிற்றில் எட்டி உதைக்கும் போது அவர் வீடியோ எடுத்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

நடிகை பரீனா:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்களில் வில்லிகளை பார்த்திருப்போம். ஆனால் அவர்களை மிஞ்சும் அளவிற்கு இளம் வில்லியாக நடிகை பரீனா பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருகிறார். தொகுப்பாளராக அறிமுகமான பரீனா தன்னுடைய நடிப்பு திறமையால் பிரபலமாகி இருக்கிறார். இந்த சீரியலில் அவருக்கு பல நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் அதை எல்லாம் பொறுட்படுத்தாமல் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் வெளிப்படுத்தி வருகிறார். பரீனாவிற்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதாக தனது ரசிகர்களுக்கு அறிவித்தார்.

“பாரதி கண்ணம்மா” பரீனா குழந்தையின் பெயர் திப்பு சுல்தானா? கணவர் ரகுமான் சொன்ன தகவல்!

8 மாதம் வரை அவர் கர்ப்பமாக இருப்பது ரசிகர்களுக்கு தெரியாமல் நடித்து வந்தார். அதன் பின் தனது கர்ப்ப காலத்தை மறக்க முடியாமல் செய்ய பல புதுவிதமான போட்டோஷூட்களை எடுத்து சர்ச்சையில் சிக்கினார். பேபி பம்ப் மெகந்தி, நீருக்கு அடியில் பாத் டப் புகைப்படம் என பல இருக்க எல்லை மீறி குதிரையுடன் ஒரு போட்டோஷூட் நடத்தினார். அதனால் அவருக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் அதை எல்லாம் அவர் கண்டுகொள்ளாமல் பாசிட்டிவாக இருந்தார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா வெளியிட்ட புரொடக்க்ஷன் சாப்பாடு வீடியோ – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

அதன் பின் கர்ப்பகால யோகா, சாப்பாட்டு முறை என பல வீடியோக்களை பதிவிட்டு மற்ற கர்ப்பிணிகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த 16 ஆம் தேதி சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். தொடர்ந்து தன்னுடைய பிரசவ அனுபவங்களை பற்றி இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வரும் அவர், தனது மகன் வயிற்றில் இருக்கும் போது எட்டி உதைக்கும் வீடியோ ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் குட்டி சேம்ப் அழகாக அம்மாவை எட்டி உதைக்கிறார். இவ்வளவு அழகான வீடியோ பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!