‘பாரதி கண்ணம்மா’ பரினா வீட்டில் நடைபெற்ற விஷேசம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் வில்லி நடிகை பரினாவின் குழந்தைக்கு தற்போது பெயர் சூட்டும் விழா நடைபெற்ற நிலையில், இதில் சீரியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை பரினா
கடந்த சில வாரங்களாக பல்வேறு ஸ்வாரசியமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் தற்போது 650 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது. இத்தொடரில் 10 ஆண்டுகளாக பிரிந்திருந்த பாரதியும், கண்ணம்மாவும் தற்போது மீண்டுமாக ஒன்றிணைந்துள்ளனர். அந்த வகையில் இந்த சீரியலில் இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட ரொமான்டிக் காட்சிகள் ஒளிபரப்பாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
Vijay TV Bigg Boss 5 Promo | தனது காதலை பாவ்னியிடம் சொன்ன அமீர்! ப்ரியங்காவிடம் வெட்கப்பட்ட பாவ்னி!
இதற்கிடையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வெண்பா என்ற கதாப்பாத்தித்தில் நடித்து வந்த நடிகை பரினா குழந்தை பிரசவத்துக்காக அந்த சீரியலை விட்டு சிறிது காலம் விலகி இருந்தார். இந்த பிரேக் எடுத்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், சமீபத்தில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டுமாக இணைந்துள்ளார் நடிகை பரினா. இவரது இந்த செயலை பாராட்டி பலரும் வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நடிகை பரினா வீட்டில் ஒரு கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ இன்றைய எபிசோடு!
அதாவது, சமீபத்தில் நடிகை பரினாவுக்கு பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு பெயர் சூடும் விழா நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் பிரபலங்கள் உட்பட பல சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு ஆட்டம், பாட்டம் என கோலாகலமாக நடந்தேறி இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது குறிப்பிடத்தக்கது.