ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ இன்றைய எபிசோடு!

0
ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறும் கோபி - 'பாக்கியலட்சுமி' இன்றைய எபிசோடு!
ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறும் கோபி - 'பாக்கியலட்சுமி' இன்றைய எபிசோடு!
ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ இன்றைய எபிசோடு!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் மருத்துவமனையில் இருக்கும் ராதிகாவை பார்ப்பதற்காக வரும் கோபி, அவரது அம்மாவிடம் தான் ராதிகாவை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வதாக கூறுவது போல இன்றைய எபிசோடு ஒளிபரப்பாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியல்

பல்வேறு புதிய திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்கியாவின் கணவர் கோபி ராதிகா மீதுள்ள காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல திட்டமிட்டு வருகிறார். இதுவரை தனது குடும்பத்தாருக்கு தெரியாமல் ராதிகாவுடன் ஆன தனது காதலை வளர்த்து வரும் கோபி, அவரது அப்பா ராமமூர்த்தியிடம் கையும் களவுமாக மாட்டி கொண்டார். என்றாலும் இந்த விஷயத்தை ராமமூர்த்தி, தனது குடும்பத்தாரிடம் சொல்லாமல் இருக்க கோபிக்கு சற்று தைரியம் கிடைக்கிறது.

‘செம்பருத்தி’ ஷபானாவை மிரட்டும் ‘பாக்கியலட்சுமி’ ஆர்யன் குடும்பத்தினர்? ஒரே மாதத்தில் பிரிவு!

இதற்கிடையில் ராதிகாவை இனி பார்க்க மாட்டேன் என அப்பாவிடம் சத்தியம் செய்துள்ள கோபி, ராதிகாவுக்கு ஆக்சிடன்ட் ஆனது தெரிந்ததும் மயூவுடன் மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு ராதிகாவின் அம்மாவிடம் பேசும் கோபி, ராதிகாவை தான் திருமணம் செய்துகொள்வதாக கூறுவது போல சில காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம்பிடிக்க இருக்கிறது. இது தொடர்பாக வெளியான ப்ரோமோவில், ராதிகாவை பார்க்க வரும் கோபியை வெளியே போக சொல்லி அவரது அம்மா திட்ட, நான் ராதிகாவை பார்க்க வரவேண்டாம் என சொல்லாதீர்கள் என பதில் சொல்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் கர்ப்பமான கண்ணம்மா? கலாய்க்கும் ரசிகர்கள்!

பிறகு ராதிகா மீது அக்கறை இருந்திருந்தால், நீங்கள் எப்போதோ உங்கள் குடும்பத்தை விட்டு வந்திருப்பீர்கள் என கேட்கும் ராதிகாவின் அம்மாவிடம், இப்போது என் குடும்பத்தை விட்டு வர வேண்டும். அவ்வளவு தானே. ராதிகா, மயூவுக்காக நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன். ராதிகாவை திருமணம் செய்து கொள்வேன். அதற்காக என் குடும்பத்தை விட்டு வர கூட தயாராக இருக்கிறேன் என கோபி கூறுவது போல வெளியான சில காட்சிகள் பார்வையாளர்களின் கவனம் வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!