
Vijay TV Bigg Boss 5 Promo | இந்த வாரம் வெளியேறும் நபர் யார்? கடுமையாகும் போட்டிகள்! ரசிகர்கள் உற்சாகம்!
பிக்பாஸ் நிகழ்ச்சி தனது இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. இதனால் போட்டியில் அதிக விறுவிறுப்பு கூடி வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
எவிக்சன் பட்டியல்:
விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் விளம்பர லோகோவில் வரும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற வாக்கியத்திற்கு ஏற்றார் போல் உள்ளது. போட்டியின் ஆரம்பத்தில் வெளியேறி விடுவார்கள் என்று எதிர்பார்த்த போட்டியாளர்கள் தற்போது வரை தொடர்ந்து நிகழ்ச்சியில் உள்ளனர். ஆனால் இறுதி வரை இருப்பார்கள் என்று நினைத்த அண்ணாச்சி, அபிஷேக் போன்றவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் போட்டியாளர்கள் மத்தியில் ஒரு வித பீதி எழுந்துள்ளது. மக்கள் யாரை எப்போது வெளியேற்றுவார்கள் என்று அச்சத்தில் உள்ளனர்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் கர்ப்பமான கண்ணம்மா? கலாய்க்கும் ரசிகர்கள்!
இந்த வாரம் இதுவரை இல்லாத மாற்றமாக பிக்பாஸ் அனைத்து போட்டியாளர்களை வெளியேற்ற பட்டியலில் நாமினேட் செய்தார். இதற்க்கு வைக்கப்படும் டாஸ்குகளில் ஜெயிக்கும் போட்டியாளர்கள் வெளியேற்றப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த வாரத்தின் ஆரம்பம் முதல் தினமும் வித்தியாசமாக பல டாஸ்குகள் அளிக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்ற வேகம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. இந்த போட்டியில் தகுதி பெறுவதற்கு என்று சில போட்டிகள் வைக்கப்பட்டது.
ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறும் கோபி – ‘பாக்கியலட்சுமி’ இன்றைய எபிசோடு!
இதனால் இந்த வாரம் முழுவதும் நிறைய டாஸ்குகளை போட்டியாளர்கள் செய்து வந்தனர். அதில் ஒவ்வொரு கட்டமாக சிபி, நிரூப், அமீர், சஞ்சீவ், தாமரை என்று இவர்கள் காப்பாற்றப்பட்டனர். ஆனால் ப்ரியங்கா, அக்ஷரா, ராஜு, அபிநய், பாவனி மற்றும் வருண் ஆகிய 6 பேரும் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டதால், இவர்கள் ஆறு பேரும் இந்த வார எவிக்சன் பட்டியலில் இடம் பெறுவதாக பிக்பாஸ் அறிவிக்கிறார். இவர்கள் அனைவரும் முக்கிய போட்டியாளர்கள் என்பதால் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதனால் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்து இப்போதே மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.