கண்ணம்மா வீட்டில் ‘சாப்பிட மாட்டேன்’ என பிடிவாதம் செய்யும் பாரதி – சீரியலில் அடுத்த எபிசோட்!

0
கண்ணம்மா வீட்டில் 'சாப்பிட மாட்டேன்' என பிடிவாதம் செய்யும் பாரதி - சீரியலில் அடுத்த எபிசோட்!
கண்ணம்மா வீட்டில் 'சாப்பிட மாட்டேன்' என பிடிவாதம் செய்யும் பாரதி - சீரியலில் அடுத்த எபிசோட்!
கண்ணம்மா வீட்டில் ‘சாப்பிட மாட்டேன்’ என பிடிவாதம் செய்யும் பாரதி – சீரியலில் அடுத்த எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ அவரது வீட்டிற்கு வருகிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பு அதிகமாகி உள்ளது. நீதிமன்றத்தில் பாரதியும், கண்ணம்மாவும் சேர்ந்து வாழ வேண்டும் என உத்தரவிட்டதை அடுத்து பாரதி வேறு வழி இல்லாமல் பாதி மனதுடன் கண்ணம்மா உடன் வாழ சம்மதம் தெரிவித்து இருக்கிறார். பின் பாரதி கண்ணம்மா உடன் இருந்து ஒரே வாரத்தில் அவளே என்னுடன் வாழ மாட்டேன் என சொல்ல வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே வருகிறார். வீட்டிற்கு வந்ததும் கண்ணம்மா மாடியில் இருந்து பார்க்கிறார்.

திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் சரஸ்வதியின் அப்பா, தமிழின் முடிவு என்ன? இன்றைய எபிசோட்!

பாரதி முறைத்து கொண்டே வர கண்ணம்மா வீட்டில் ஹேமா போட்டோ இருப்பதை பார்த்து கோபப்படுகிறார். பின் கண்ணம்மாவை அதை கழட்ட சொல்கிறார். கண்ணம்மா லக்ஷ்மியை கூப்பிட செல்ல பாரதியுடன் சேர்ந்து சந்தோசமாக இருக்க வேண்டும் என சௌந்தர்யா பேசிக் கொள்கிறார். பின் லக்ஷ்மியை என் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என சொல்ல, லட்சுமி நான் போகிறேன் என சொல்கிறார். பின் கண்ணம்மா லக்ஷ்மியை பிரிந்த வருத்தத்தில் இருக்கிறார்.

பிரசவத்துக்கு பின்பு ‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினா வெளியிட்ட முதல் பதிவு – வைரலாகும் புகைப்படம்!

அடுத்து பாரதி கண்ணம்மாவுடன் எப்படி நடந்து கொள்ள இருக்கிறார் என்பது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் கண்ணம்மா சமைத்ததை சாப்பிட மாட்டேன் என பாரதி பிடிவாதம் செய்ய, நான் ஹோட்டலில் ஆர்டர் செய்திருக்கேன் இப்போது வந்து விடும், நீ சமைப்பதை விட அது நன்றாக இருக்கும் என சொல்கிறார். கண்ணம்மா சிரித்துக் கொண்டே இருக்க ஆர்டர் செய்தது வருகிறது. அதை வாயில் வைக்க நன்றாக இல்லாதது போல முகம் மாறுகிறது. அதை பார்த்து கண்ணம்மா சிரிக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!