விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ – வைரலாகும் பதிவு!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ - வைரலாகும் பதிவு!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ - வைரலாகும் பதிவு!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த வீடியோ – வைரலாகும் பதிவு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் Start Music நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் மற்றும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகர்கள் பலரும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பாரதி, கண்ணம்மா மற்றும் வெண்பா முவரும் ஆடிய நடன வீடியோ வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பாரதியை எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டும் என வெண்பா பல திட்டங்களை தீட்டி கொண்டிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் லட்சுமியும் தனது அப்பாவை நினைத்தும், ஹேமா தனது அம்மாவை நினைத்தும் ஏங்க ஆரம்பித்து விட்டனர். எப்படியாவது தனது அப்பாவை தேடி கண்டுபிடித்து விட வேண்டும் என லட்சுமி தனது தேடல் வேட்டையை துவங்கியுள்ளார்.

கடை வசூலை கொடுக்கும் ஜனார்த்தனன், குடும்பத்தை நினைத்து கவலையில் ஜீவா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எபிசோடு!

இப்படி இருக்கையில் ஹேமா தனது அப்பாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க திட்டம் போட்டு கொண்டிருக்கிறார். லட்சுமியிடமும் இது குறித்து பேசுகிறார். அதாவது உனக்கு அப்பா இல்லை, எனக்கு அம்மா இல்லை நாம் ஏன் சமையல் அம்மாவையும் எனது அப்பாவையும் திருமணம் செய்து வைக்க கூடாது என ஹேமா கூறுகிறார். லட்சுமியும், ஹேமாவும் தனது அம்மா அப்பாவை நினைத்து ஏங்குவதை பார்த்து பாரதியின் குடும்பத்தினர்கள் மற்றும் கண்ணம்மா ஆகியோர் மிகவும் வருந்தி கொண்டிருக்கின்றனர்.

ஹேமாவை வெறுக்கும் லட்சுமி, காரணம் தெரியாமல் குழப்பத்தில் கண்ணம்மா – இன்றைய எபிசோடு!

இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கையில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் Start Music – Premier League நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு எதிர் அணியாக தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் போது பாரதி, கண்ணம்மா மற்றும் வெண்பா மூவரும் நடனமாடியுள்ளனர். இவர்கள் நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!