புதிய திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2? வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!

0
புதிய திருப்பங்களுடன் 'பாரதி கண்ணம்மா' சீசன் 2? வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!
புதிய திருப்பங்களுடன் 'பாரதி கண்ணம்மா' சீசன் 2? வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!
புதிய திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’ சீசன் 2? வெளியான ப்ரோமோ! ரசிகர்கள் ஷாக்!

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது பாரதிகண்ணம்மா சீரியல். இந்த சீரியலில் அடுத்த சீசன் கூடிய விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியலில் ஆரம்பம் முதலே பல திருப்பங்களுடன் கதைக்களம் அமைந்துள்ளது. தற்போது இந்த சீரியலில் 8 வருடங்களுக்கு பிறகு ஹேமா மற்றும் லட்சுமி என்ற இரட்டை குழந்தைகளுடன் பாரதி, கண்ணம்மா வாழ்ந்து வருகின்றனர். 8 வருடங்களுக்கு பிறகு இன்னுமே டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் இருக்கின்றனர்.

அனுவை டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சொல்லும் பாட்டி, குஷியில் ரோஜா & அர்ஜுன் – பரபரப்பான அடுத்த எபிசோட்!

தற்போது கண்ணம்மாவுக்கு தனது இரட்டை குழந்தைகளை பற்றிய விவரம் தெரிய வருகிறது. இதனால் பாரதிக்கு விவாகரத்து வழங்க அவர் மறுக்கிறார். டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் தான் என்னால் விவாகரத்து தர முடியும் என்றும் கறாராக கூறி விடுகிறார். இப்படி பலவித ட்விஸ்டுகளுடன் பாரதி கண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியல் அடுத்த சீசன் ஆக ஒளிபரப்பாகும் என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதில் இன்னும் எட்டு வருடங்களுக்குப் பிறகு லக்ஷ்மி மற்றும் ஹேமா இருவரும் வளர்ந்து பெரியவர்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் ரீஎன்ட்ரி கொடுக்கும் நமீதா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

அதில் பாரதியிடம் வளர்வார்களா அல்லது கண்ணம்மாவிடம் வளர்வார்களா என்பது பற்றி தெரியவில்லை. தற்போது விஜய் தொலைக்காட்சியில் மௌனராகம் சீரியல் இதேபோல் தான் ஒளிபரப்பாகி வருகிறது. அதனால் பாரதி கண்ணம்மா சீரியல் இதுபோல் ஒளிபரப்பாக வாய்ப்புகள் இருக்கிறது என்ற கருத்துக்கள் பரவலாகப் பேசப்படுகிறது. அந்த இரண்டாவது பாகத்திலும் சௌந்தர்யா, வேணு, அகிலன் மற்றும் அஞ்சலி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. முக்கியமாக பார்க்கப்படும் வெண்பா இருப்பாரா என்பது பற்றி தெரியவில்லை. இதற்கான புரோமோ விஜய் தொலைக்காட்சி கூடிய விரைவில் வெளியிடும் என்றும் நம்பப்படுகிறது

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!