கண்ணம்மாவின் மகள் தான் ஹேமா, உண்மையை உளறிய சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!

1
கண்ணம்மாவின் மகள் தான் ஹேமா, உண்மையை உளறிய சௌந்தர்யா - 'பாரதி கண்ணம்மா' ப்ரோமோ!
கண்ணம்மாவின் மகள் தான் ஹேமா, உண்மையை உளறிய சௌந்தர்யா - 'பாரதி கண்ணம்மா' ப்ரோமோ!

கண்ணம்மாவின் மகள் தான் ஹேமா, உண்மையை உளறிய சௌந்தர்யா – ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா வைத்த நிபந்தனையின் பேரில் கண்ணம்மா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட செல்ல அங்கு வரும் சௌந்தர்யா ஹேமா தான் கண்ணம்மாவின் குழந்தை என்கிற உண்மையை உடைப்பதாக ஒரு புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பாரதி கண்ணம்மா

ஒவ்வொரு வாரமும் புதிய புதிய திருப்பங்களுடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மீண்டுமாக ஒரு ட்விஸ்டுடன் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கிறது. அதாவது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இதுவரை மறைக்கப்பட்டு வந்த ரகசியங்கள் எல்லாம் கடந்த 2 வாரங்களாக ஒவ்வொன்றாக வெளியே வந்து கொண்டிருக்கிறது. அதிலும் கண்ணம்மாவுக்கு 2ஆவது குழந்தை பிறந்ததை தெரிந்து கொண்ட பிறகு அந்த குழந்தை குறித்த தேடலில் அவர் இருந்து வருகிறார்.

பாக்கியா வங்கிக்கணக்கில் திருடு போன பணம், அதிர்ச்சியில் எழில் – வெளியான ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!

ஆனால் வெண்பாவின் பிடிக்குள் சிக்கியிருக்கும் கண்ணம்மா, வெண்பாவின் சூழ்ச்சியால் பாரதியை விவாகரத்து செய்யும் அளவுக்கு துணிந்து விட்டார். இப்படிப்பட்ட காட்சிகளுடன் வெளியாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் தற்போது மீண்டுமாக புதிய கதை முடிச்சுகள் அவிழத் துவங்கியுள்ளது. அந்த வகையில் கண்ணம்மாவுக்கு பிரசவம் பார்த்தது பாரதி என்கிற உண்மையை சௌந்தர்யா அறிந்து கொள்கிறார். அதே போல பாரதியை விவாகரத்து செய்ய சொல்லி கண்ணம்மாவிடம் விவாகரத்து பத்திரத்தை கொடுத்து மிரட்டுகிறார் வெண்பா.

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 போட்டியாளர்களின் முழு விபரங்கள் – மிக பிரம்மாண்டமாக துவக்கம்!

அப்போது குழந்தை தான் முக்கிய என நினைத்த கண்ணம்மா, மனதை கல்லாக்கி கொண்டு விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட போகிறார். அந்நேரத்தில் அங்கு வரும் சௌந்தர்யா, கண்ணம்மாவிடம் இருக்கும் விவாகரத்து பத்திரத்தை வாங்கி பார்க்கிறார். சௌந்தர்யா கூறுவதை மறுத்து வெளியே செல்ல துடிக்கும் கண்ணம்மாவை நிறுத்தி ஹேமா தான் உன்னுடைய இன்னொரு குழந்தை என்ற உண்மையை சௌந்தர்யா கூற கண்ணம்மா அழுகிறவாறு புதிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here