பாரதி கண்ணம்மா பரினாவின் ‘நம்ம வீட்டு வளைகாப்பு’ நிகழ்ச்சி – வாழ்த்த வந்த சீரியல் பிரபலங்கள்!

0
பாரதி கண்ணம்மா பரினாவின் 'நம்ம வீட்டு வளைகாப்பு' நிகழ்ச்சி - வாழ்த்த வந்த சீரியல் பிரபலங்கள்!
பாரதி கண்ணம்மா பரினாவின் 'நம்ம வீட்டு வளைகாப்பு' நிகழ்ச்சி - வாழ்த்த வந்த சீரியல் பிரபலங்கள்!
பாரதி கண்ணம்மா பரினாவின் ‘நம்ம வீட்டு வளைகாப்பு’ நிகழ்ச்சி – வாழ்த்த வந்த சீரியல் பிரபலங்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பாரினாவுக்கு தற்போது வளைகாப்பு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ள காணொளி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீமந்த நிகழ்வு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு தொடர் என்றால் அது ‘பாரதி கண்ணம்மா’ தான். இதில் வெண்பா என்ற கதாப்பாத்திரத்தில் படு பயங்கரமான வில்லியாக நடித்து வரும் பிரபல விஜே பரினா தற்போது கர்ப்பமாக உள்ளார். இவரது பிரசவத்துக்கு இன்னும் சில காலங்களே இருக்கும் நிலையில், சமீபத்தில் பரினாவுக்கு சீமந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. பரினாவின் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை கலாட்டா யூடியூப் சேனல் நடத்தி சிறப்பித்துள்ளது.

முதல்முறையாக காதலருடன் புகைப்படத்தை வெளியிட்ட ஜீ தமிழ் சீரியல் நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!

அந்த வகையில் நடிகை பரினாவுக்கு சர்பிரைஸாக கொடுக்கப்பட்ட இந்த வளைகாப்பு நிகழ்வில் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள் உட்பட மற்ற சின்னத்திரை நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டு இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், பரினா அவரது கணவர் இணைந்து நடைதிய போட்டோ ஷூட் டின் தொடர்ச்சியாக சர்பிரைஸ் வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” அம்மாவின் சினிமா பயணம் – 14 வயதில் திரையுலகில் அறிமுகம்!

அதில் மஞ்சள் நிற புடவையணிந்து பரினா அமர்ந்திருக்க, ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகர் அருண் பிரசாத், அகிலன், ரோஷினி, ஸ்வீட்டி, ‘ராஜா ராணி’ சீரியல் நடிகை அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து பாரதி கண்ணம்மா படப்பிடிப்பு தளத்தில் நடிகை பரினவுடன் செய்த சேட்டைகளை அருண், ரோஷினி மற்றும் ஸ்வீட்டி பகிர்ந்து கொள்ள வளைகாப்பு விழா சில நெகிழ்ச்சியான சம்பவங்களுடன் இனிதே நிறைவுற்றது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியின் ட்ரைலர் வீடியோவை கண்டுகளித்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!