விஜய் டிவி “பாக்கியலட்சுமி” அம்மாவின் சினிமா பயணம் – 14 வயதில் திரையுலகில் அறிமுகம்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாக்கியலட்சுமி" அம்மாவின் சினிமா பயணம் - 14 வயதில் திரையுலகில் அறிமுகம்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” அம்மாவின் சினிமா பயணம் – 14 வயதில் திரையுலகில் அறிமுகம்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமியில், பாக்கியா கதாபாத்திரத்தில் நடிக்கும் KS சுசித்ராவின் சினிமா வாழ்க்கை பற்றி இந்த பதிவில் காணலாம்.

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமியில் பாக்கியா கதாபாத்திரத்தில் நடிப்பவர் KS சுசித்ரா. குடும்ப கதையுள்ள இந்த சீரியலில் குடும்பத்தலைவியின் கஷ்டங்களை பற்றி தத்ரூபமாக நடித்து வருகிறார். இவர் நல்ல குடும்பத் தலைவி, நல்ல அம்மா, நல்ல மாமியார், நல்ல மருமகள் என்ன ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். பெங்களூரை இருப்பிடமாக கொண்ட இவர் தன்னுடைய திரை வாழ்க்கையை 14 வயதிலேயே தொடங்கி விட்டார். நடிகர் உபேந்திராவின் தங்கையாக எ(A) என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

ராதிகா புடவை மாறியதை சமாளிக்கும் கோபி, பாக்கியாவை அன்னையர் தினம் நிகழ்ச்சிக்கு அழைக்கும் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!

தொடர்ந்து ஒன்மேன் ஆர்மி என்ற படத்திலும் மஞ்சுநாதா, காட் பாதர், சிவா, பீமா, கிரெசி ஸ்டார், எஜமான் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 20க்கு மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடந்த 2014ல் AL விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் படத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் சின்னத்திரை சீரியல்களில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக மனே தன என்ற கன்னட சீரியலில் நடித்துள்ளார். அதன் பின்னர் அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் பெருகியது.

அதன் பின்னர் மேலும் காவியா அஞ்சலி, ராதா ரமணா, மாங்கல்ய, ஈஸ்வரி போன்ற பல கன்னட சீரியல்களில் நடித்துள்ளார். ஜெமினி டிவியில் கன்டெ குடற் நீ கடலி என்ற தொடரில் அறிமுகமானார். மேலும் அபரஜ்ஜித, நாகாம்மா, பந்தம், மௌன ராகம், அபிலாஷா போன்ற 10க்கும் மேற்பட்ட தெலுங்கு தொடர்களில் நடித்து ஃபேமஸ் ஆனார். பல மொழி சீரியல்களில் நடித்திருந்தாலும் சின்னத்திரையில் இவருக்கென தனி அடையாளத்தை கொடுத்தது பாக்கியலட்சுமி சீரியல் தான்.

வெண்பாவிற்கும் பாரதிக்கும் திருமணம் ஆகாத உண்மையை சொல்லும் அஞ்சலி – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!

இவர் 2008 ஆம் ஆண்டு கலைஞர் டிவியில் நாணல் என்ற சீரியலில் அறிமுகமானவர். அதன் பின்னர் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இது ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஸ்ரீமோயி’ என்ற பெங்காலி மொழித் தொடரின் ரீமிக்ஸ் ஆகும். இந்த சீரியல் தற்போது 300 எபிசோடுகளை கடந்து TRP இல் முன்னணியில் இருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுசித்ராவுக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ஃபாலோவர்ஸ் உள்ளனர். அதில் ஷூட்டிங் ஸ்பாட் அட்ராசிட்டிஸ், ரீல்ஸ், டான்ஸ் வீடியோ என பதிவிட்டு வருகிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!