‘பாரதி கண்ணம்மா’ பரினா குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட கணவர் – ரசிகர்கள் வாழ்த்து!

0
'பாரதி கண்ணம்மா' பரினா குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட கணவர் - ரசிகர்கள் வாழ்த்து!
'பாரதி கண்ணம்மா' பரினா குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட கணவர் - ரசிகர்கள் வாழ்த்து!
‘பாரதி கண்ணம்மா’ பரினா குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட கணவர் – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் வெண்பா பரீனாவிற்கு கடந்த நவம்பர் 16 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்த நிலையில் முதன்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

நடிகை பரீனா:

பாரதி கண்ணம்மா சீரியல் மக்களின் பெரிய ஆதரவை பெற்ற முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி வில்லிகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை பரீனா. அவர் கர்ப்பமாக இருந்த நிலையில் 9 மாதம் வரை சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார். இதனால் இவரை பலர் பாராட்டி வந்தனர். இந்நிலையில் தற்போது சீரியலில் இருந்து ஓய்வு எடுத்த அவருக்கு கடத்த 16 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய இசைவாணி – ரசிகர்கள் ஷாக்! வோட்டிங் லிஸ்ட் ரிலீஸ்!

அது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் இது மகன் என அவர் பதிவிட்டிருந்தார். பிரசவத்திற்கு சில நாட்கள் முன்பு வரை சீரியலில் நடித்து சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பரீனா மற்ற பெண்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறார். அதனால் அவரை பாராட்டி பலர் பதிவிட்டிருந்தனர். தற்போது வரை அவர் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருக்கிறார். ஆனால் சில யூடியூப் சேனல்களில் அவருடைய குழந்தை என சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

ஜீ தமிழுக்கு செல்லும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடிகை வைஷ்ணவி – ரசிகர்கள் ஷாக்!

அதை பார்த்த பரீனாவின் கணவர் அது எங்க குழந்தை இல்லை என கமெண்ட் செய்துள்ளனர். மேலும் அவர்களது அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் அது குறித்த விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். இந்நிலையில் முதன்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் அதில் குழந்தையின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் கழித்து குழந்தையின் புகைப்படத்தை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அந்த புகைப்படத்தை பார்த்த பரீனா ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!