விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய இசைவாணி – ரசிகர்கள் ஷாக்! வோட்டிங் லிஸ்ட் ரிலீஸ்!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய இசைவாணி - ரசிகர்கள் ஷாக்! வோட்டிங் லிஸ்ட் ரிலீஸ்!
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய இசைவாணி - ரசிகர்கள் ஷாக்! வோட்டிங் லிஸ்ட் ரிலீஸ்!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய இசைவாணி – ரசிகர்கள் ஷாக்! வோட்டிங் லிஸ்ட் ரிலீஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த வாரம் எலுமினேஷனில் இசைவாணி வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பிக்பாஸ் சீசன் 5:

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சி தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு எதிர்ப்புகளும் , எதிர்மறை கருத்துக்களும் வந்தது. ஆனால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக தொடர ஆரம்பித்து பிக்பாஸ் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. இந்த நிகழ்ச்சி பலருக்கு திருப்பு முனையாக அமைந்து விடுகிறது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து படவாய்ப்புகளை பெறுகின்றனர்.

ஜீ தமிழுக்கு செல்லும் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல் நடிகை வைஷ்ணவி – ரசிகர்கள் ஷாக்!

தற்போது பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகி வருகிறது. 40 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இதில் விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா, சின்னத்திரை நடிகர் ராஜூ, மாடல் மதுமிதா, ஐக்கி, நகைச்சுவை நடிகர் அண்ணாச்சி, சின்னத்தம்பி சீரியல் நாயகி பாவ்னி , நிருப் போன்றோர் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 18 போட்டியாளர்கள் இருந்தனர். இதில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேறி வருகின்றனர்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியல் சரவணன், ஸ்ரேயாவிற்கு திருமணம் எப்போது? அவரே சொன்ன பதில்!

இந்த வாரம் நாமினேஷனில் அக்ஷரா, சிபி, தாமரை, இசைவாணி, நிரூப், ஐக்கி, இமான், பாவனி , அபினை என மொத்தம் ஒன்பது போட்டியாளர்கள் இருக்கின்றனர். அதில் இசைவாணி குறைவான வாக்குகள் பெற்றிருப்பதாகவும், அதனால் அவர் இந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த சுவாரஸ்ய தகவலாக வைல்டு கார்டு என்ட்ரியில் அபிஷேக் ராஜா நுழைகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!