கண்ணம்மாவை முழு மனதாக ஏற்றுக்கொள்ளும் பாரதி – அனல் பறக்கும் கதைக்களம்!

2
கண்ணம்மாவை முழு மனதாக ஏற்றுக்கொள்ளும் பாரதி - அனல் பறக்கும் கதைக்களம்!
கண்ணம்மாவை முழு மனதாக ஏற்றுக்கொள்ளும் பாரதி - அனல் பறக்கும் கதைக்களம்!
கண்ணம்மாவை முழு மனதாக ஏற்றுக்கொள்ளும் பாரதி – அனல் பறக்கும் கதைக்களம்!

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. முக்கியமான கட்டத்தை நெருங்கும் போது திடீரென லாக்டவுன் காரணமாக சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. தெலுங்கு சீரியல் ரீமேக் தான் இந்த பாரதி கண்ணம்மா என்பது நம் அனைவர்க்கும் தெரியும். அடுத்தடுத்து இந்த பாரதி கண்ணம்மா சீரியலில் என்ன ட்விஸ்டு உள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல சம்பவங்கள் நடந்து வருகிறது. பாரதியும், கண்ணம்மாவும் எப்பொழுது சேருவார்கள் என்ற ஆர்வம் அனைவர்க்கும் இருக்கும். ஆனால் வெண்பாவால் இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது பாரதி மீது ஆசைப்படும் வெண்பா அவரை அடையும் நோக்கில் ஏற்கனவே கொலை செய்யும் அளவிற்கு சென்றவர்.

கண்ணம்மாவை மட்டும் விட்டு வைப்பாரா என்ன?? ஆனால் வெண்பா பிடியில் இருந்து கண்ணம்மா தொடர்ந்து தப்பித்துக் கொண்டு தான் வந்தார். இப்படி இருக்க அடுத்து போடப்பட்ட லாக்டவுன் காரணமாக பாரதி கண்ணம்மா சீரியல் நிறுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது தான் சமையல் அம்மா என்றால் கண்ணம்மா என்ற உண்மையே பாரதிக்கு தெரிய வந்துள்ளது. இனி லட்சுமியும் கண்ணம்மாவின் மகள் என்று தெரிந்தால் என்னென்ன நடக்குமோ என்ற ஆர்வத்தில் மக்கள் இருந்தனர்.

TN Job “FB  Group” Join Now

இனி தெலுங்கு சீரியலை அடிப்படையாக வைத்து அடுத்த எபிசோடுகளை காணலாம். கார்த்திகை தீபம் சீரியல் பாரதி கண்ணம்மாவின் ரீமேக். அதாவது இப்பொழுது ஹேமா இத்தனை நாள் புகழ்ந்து தள்ளிய சமையல் அம்மா கண்ணம்மா தான் என தெரிந்ததும் மிகவும் கோவமடைகிறார் பாரதி. அவரிடம் பேச கூடாது என்றும் சொல்கிறார்.

இதனால் ஹேமாவிற்கு உடல் நலம் சரியில்லாமல் போயி விடுகிறது. வேறு வழியில்லாமல் பாரதி கண்ணம்மாவிடம் தான் ஹேமாவை அழைத்து செல்லும் சூழ்நிலை ஏற்படும். அதன் பிறகு வெண்பா போட்ட விஷ ஊசியால் கண்ணம்மாவின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாக போய்விடுகிறது. இதனை பாரதி தெரிந்து கொண்டு கண்ணம்மாவை காப்பாற்ற போராடி வருகிறார்.

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை ரத்து செய்ய 65% பேர் ஆதரவு – கருத்துகேட்பு முடிவுகள்!

மேலும் கண்ணம்மாவின் உடல் நிலையை காப்பற்ற கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வது போலவும் நடிக்கிறார். கண்ணம்மா மாத்திரை சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்க கன்னத்தை சேர்த்து அறைந்து இப்போ உன்னை அடிச்சது யாருனு நெனச்ச, டாக்டர்னு நெனச்சியா, இல்லை சௌந்தர்யா மகன்னு நெனச்சியா, உன்னோட புருஷன் டி என்று சொன்னதும் கண்ணம்மா பாரதியை கட்டிப்பிடிக்கிறார்.

இருவரும் சேர்ந்து விட்டார்கள் என நினைத்தால் பாரதி கண்ணம்மாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தான் இப்படியெல்லாம் செய்கிறார். இவ்வாறு பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா தெலுங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழிலும் விரைவில் இந்த கதைக்களத்தை காணலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!