தமிழகத்தில் +2 பொதுத்தேர்வை ரத்து செய்ய 65% பேர் ஆதரவு – கருத்துகேட்பு முடிவுகள்!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட வேண்டுமா அல்லது தேர்வுகளை ரத்து செய்யலாமா என்பது தொடர்பாக நமது வலைதளத்தில் நடத்தப்பட்ட கருத்து கேட்பில், அதிகமானோர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கூறி அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளனர்.
+2 பொதுத்தேர்வு கருத்துகேட்பு:
தமிழகத்தில் ஒத்தி வைக்கப்பட்ட +2 மாணவர்களின் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா என்பதில் தற்போது வரை குழப்பங்களும், சிக்கல்களும் நீடித்து வருகிறது. இதற்கு முன்னோடியாக 12 ஆம் வகுப்பு CBSE மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக அறிவித்தது. இதை மேற்கோளாக காட்டி மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
தமிழகத்திலும் கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்த வேண்டியது அவசியமா என்ற கருத்து கேட்பு படிவத்தில் பெரும்பலானவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். விரிவாக கூறின் 65.1% பேர் தேர்வுகளை நடத்துவது அவசியம் இல்லை என்றும், 34.9% பேர் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது தவிர தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறுவதற்கு சில காரணங்களையும் முன் வைத்துள்ளனர். மேலும் CBSE பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது சரி தான் என 68 சதவீத பேரும், அது புதிய கல்விக்கொள்கையை புகுத்த மத்திய அரசின் திட்டம் எனவும் 31 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் – பாகிஸ்தான் அரசு உத்தரவு!!
அவற்றில் அதிகமானோர் மாணவர்களின் உயர்கல்விக்காகவும், நுழைவுத்தேர்வுக்காகவும், எதிர்கால பணிக்காகவும் தேர்வு மதிப்பெண்கள் முக்கியம் என்பதால் +2 பொதுத்தேர்வு நடத்தப்படுவது அவசியம் என கூறியுள்ளனர். இது தவிர தேர்வுகளை ரத்து செய்யகோரிய 65% பேர், மாணவர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் எனவும், கொரோனா காலத்தில் தேர்வுகளை நடத்துவது அவசியம் இல்லை எனவும் கூறியுள்ளனர்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து கிடையாது – மாநில அரசு அறிவிப்பு!!
இந்த இரண்டு கருத்துக்களுமே முக்கியமானது என்ற வகையில், இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதால் தேர்வுகள் நடத்தப்படுமா, நடத்தப்படாதா என்பது குறித்த முடிவுகள் வெளியாவதில் அரசு தாமதம் காட்டி வருகிறது. அரசின் முடிவுகள் எதுவாயினும் அது மாணவர்களின் எதிர்காலத்துக்கு முக்கியமானதாக அமையும் என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.