கோமா நிலைக்கு சென்ற ஹேமா, கதறி அழும் பாரதி – இன்றைய எபிசோட்!

0
கோமா நிலைக்கு சென்ற ஹேமா, கதறி அழும் பாரதி - இன்றைய எபிசோட்!
கோமா நிலைக்கு சென்ற ஹேமா, கதறி அழும் பாரதி - இன்றைய எபிசோட்!
கோமா நிலைக்கு சென்ற ஹேமா, கதறி அழும் பாரதி – இன்றைய எபிசோட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று பாரதி ஹேமாவை அமெரிக்கா அழைத்து செல்லுகிறார். போகும் வழியில் ஹேமாவிற்கு வலிப்பு வந்து விடுகிறது. இதனால் குடும்பத்தினர் பரபரப்புடன் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லுகின்றனர்.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமாவை இனி தன்னால் பார்க்க இயலாது என்று நினைத்து கண்ணம்மா கவலை அடைகிறார். அவரை பாரதியின் வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லி துளசி வற்புறுத்துகிறார். இதனால் கண்ணம்மா பாரதியின் வீட்டிற்கு சென்று பார்க்கிறார். அங்கு ஹேமா மற்றும் குடும்பத்தினர் தற்போது தான் கிளம்பி சென்றனர் என்று வேலைக்காரர் ஒருவர் கூறுகிறார்.

பிரதமர் மோடி டீ விற்ற ரயில் நிலையம் ரூ.8.5 கோடி செலவில் புதுப்பிப்பு – இன்று திறந்து வைப்பு!

இதனால் ஏமாற்றத்துடன் கண்ணம்மா வீடு திரும்புகிறார். பின், ஹேமாவை இந்த நிலையில் அமெரிக்கா அழைத்து செல்லுவது தவறானது என்று பாரதியின் மருத்துவ தோழர் கூறுகிறார். இதனை பாரதி ஏற்று கொள்ள மறுக்கிறார். தனது பிரச்சனையே வேறு என்றும் உடனடியாக தான் ஹேமாவை அமெரிக்கா அழைத்து செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கிறார். அப்போது ஹேமாவிற்கு வலிப்பு வந்து விடுகிறது. இதனால் பாரதி அதிர்ச்சி அடைந்து விடுகிறார். ஹேமாவை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்காவிட்டால் கோமா நிலைக்கு சென்று விடுவார் என டாக்டர் எச்சரிக்கிறார்.

TN Job “FB  Group” Join Now

தூரத்தில் இருந்து ஹேமாவின் நிலையினை சௌந்தர்யா பார்த்ததும் தனது காரில் ஏற்றி செல்கிறார். பாரதி ஹேமாவை தூக்க வரும் போது சௌந்தர்யா அவரை நன்றாக திட்டி விடுகிறார். ஹேமாவின் இந்த நிலைக்கு காரணமே பாரதி தான் என்றும், ஹேமாவிற்கு இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் பாரதியை சும்மா விடப்போவதில்லை என்றும் மிரட்டி விட்டு ஹாஸ்பிடல் செல்லுகிறார்.

அங்கு ஹேமாவை ஐசியூவில் சேர்க்கின்றனர். ஹேமாவின் நிலையினை பார்த்து பாரதி மிகவும் பதறி விடுகிறார். தன்னால் தான் ஹேமாவிற்கு இப்படி ஆகி விட்டது என்றும் கதறி அழுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் வீடியோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here