‘பாரதி கண்ணம்மா’ ரோஷ்னி செய்யும் சுட்டித்தனமான சேட்டை – வைரல் வீடியோ!

0
'பாரதி கண்ணம்மா' ரோஷ்னி செய்யும் சுட்டித்தனமான சேட்டை - வைரல் வீடியோ!
'பாரதி கண்ணம்மா' ரோஷ்னி செய்யும் சுட்டித்தனமான சேட்டை - வைரல் வீடியோ!
‘பாரதி கண்ணம்மா’ ரோஷ்னி செய்யும் சுட்டித்தனமான சேட்டை – வைரல் வீடியோ!

விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோயின் ரோஷ்னி ஹரிப்ரியன் தனது நிஜ வாழ்க்கையில் சுட்டித்தனமாக செய்யும் சேட்டை வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் மூலமாக பிரபலமானவர் ரோஷ்னி ஹரிப்ரியன். இவர் ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அவ்வப்போது மாடலிங் செய்து வந்த அவரின் நிறம் காரணமாகவே இந்த வாய்ப்பு கிடைத்தது. இன்ஸ்டாவில் ஏழு லட்சத்திற்கும் அதிகமானோர் இவரை பின் தொடர்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ரோஷ்னி ஹரிப்ரியன் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – காலக்கெடு நீட்டிப்பு!

இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டுள்ளார். அதில் சின்ன குழந்தை போல ஷாப்பிங் ட்ராலியில் அமர்ந்து விளையாடி கொண்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு சின்ன வயதில் இருந்தே இந்த ஆசை இருந்ததாம். தற்போது தான் நிறைவேறி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

ரோஷ்னியின் இந்த கியூட் வீடியோவை ரசிகர்கள் பார்த்து பகிர்ந்து வருகின்றனர். சீரியலில் அவர் சரியான மனைவி, அம்மா என்ற கதாபாத்திரத்தில் வருவதால் அவரது இந்த குழந்தைத் தனமான வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர். ஏற்கனவே இவர் ஒரு சீனில் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் நடந்தே 2 வாரம் சென்றதால் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!