ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – காலக்கெடு நீட்டிப்பு!
அனைத்து வகையான பொதுத்துறை வங்கிகளில் சில நடப்பு கணக்கு விதிமுறைகளை தளர்த்துவதால், மேற்கொண்டு புதிய விதிகளை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31 வரை நீட்டிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புதிய விதிகள்
இந்தியாவில் செயல்பட்டு வரும் அனைத்து வகையான பொதுத்துறை வங்கிகளிலும் நடப்புக் கணக்குகளைத் திறப்பது குறித்த சுற்றறிக்கையை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி (RBI) நேற்று (ஆகஸ்ட் 4) வெளியிட்டது. அதாவது 2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட நடப்புக் கணக்குகளில் புதிய விதிகளை அமல்படுத்த ஜூலை 31 ஆம் தேதி வரை வங்கிகளுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த ஒழுங்குமுறைகளை முடிப்பதற்கான காலக்கெடுவை தற்போது அக்டோபர் இறுதி வரை நீட்டித்துள்ளது.
தமிழக அரசு மாநகர பேருந்துகளில் புதிய வசதி – போக்குவரத்து கழக இயக்குனர்!
இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இடையூறு இல்லாத செயல்பாட்டைக் கண்காணிக்கவும், செயல்பாட்டின் போது வாடிக்கையாளர்கள் தேவையற்ற சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்யவும் வங்கிகள் அனைத்தும் அதன் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய, மண்டல அலுவலகங்களில் ஒரு கண்காணிப்பு முறையை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள புதிய விதிகளின் கீழ்,
எந்த வங்கியிலிருந்தும் CC/OD வசதியை பயன்படுத்தாமல் ரூ.5 கோடிக்கும் குறைவாக கடன் பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் எந்த வங்கியிலும் நடப்புக் கணக்குகளைத் திறக்க தடை இல்லை.
எந்த வங்கியிலிருந்தும் CC/OD வசதியைப் பெறாமல் ரூ.5 கோடி அல்லது அதற்கு அதிகமாக, அதாவது ரூ.50 கோடிக்கும் குறைவான கடன் வாங்கி இருப்பவர்கள், நடப்பு கணக்கை திறக்க எந்த தடையும் இல்லை. கடன் வழங்காத வங்கிகள் கூட அத்தகைய கடன் வாங்குபவர்களுக்கு நடப்புக் கணக்குகளைத் திறக்கலாம்.
இதுவே CC/OD வசதியுடன் கடன் பெறுபவர்களுக்கு சில கட்டுப்பாடு பொருந்தும். அதாவது நடப்பு கணக்கிலிருந்து மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயல்பாடுகளும் CC/OD கணக்கிலிருந்து மேற்கொள்ளப்படலாம். ஏனெனில் CBS சூழலில் உள்ள வங்கிகள் மற்றொரு வங்கியைப் பின்பற்றுகின்றன. அதே போல ஒரு கிளை – ஒரு வாடிக்கையாளர் மாதிரியும் பின்பற்றப்படுகிறது.
TN Job “FB
Group” Join Now
இது குறித்து ரிசர்வ் வங்கி மேலும் கூறுகையில், கொடுக்கப்பட்ட சுற்றறிக்கையின் விதிகளை அமல்படுத்த வங்கிகளுக்கு 2021 அக்டோபர் 31 வரை அனுமதி அளிக்கப்படும். இந்த குறிப்பிட்ட காலத்தை வங்கிகள் முறையாக பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒருவேளை வங்கிகளால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் ஏதேனும் இருப்பின் அவரை இந்திய வங்கிகள் சங்கத்திற்கு (IBA) உரிய வழிகாட்டுதலுக்காக அனுமதிக்கப்படும். மீதமுள்ள சிக்கல்களுக்கு ஒழுங்குமுறை பரிசீலனை தேவைப்படின் செப்டம்பர் 30, 2021 க்குள் ரிசர்வ் வங்கியில் IBA பரிசீலனை செய்யலாம் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.