நாளை முதல் 7 நாட்களுக்கு தொடர் விடுமுறையில் வங்கிகள் – விடுமுறை பட்டியல் இதோ!

0
நாளை முதல் 7 நாட்களுக்கு தொடர் விடுமுறையில் வங்கிகள் - விடுமுறை பட்டியல் இதோ!
நாளை முதல் 7 நாட்களுக்கு தொடர் விடுமுறையில் வங்கிகள் - விடுமுறை பட்டியல் இதோ!
நாளை முதல் 7 நாட்களுக்கு தொடர் விடுமுறையில் வங்கிகள் – விடுமுறை பட்டியல் இதோ!

அக்டோபர் மாதத்தின் வரும் நாட்களில் தொடர்ந்து பண்டிகைகள் வர உள்ளதால் வங்கிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் நலனிற்காக வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளோம்.

வங்கி விடுமுறைகள்:

அக்டோபர் மாதம் முழுவதுமே ஏராளமான பண்டிகைகளுடன் திருவிழா சீசன் வந்துவிட்டது. இந்த மாதத்தில் துர்கா பூஜை, தசரா, தீபாவளி, சத் பூஜை மற்றும் பல பண்டிகைகள் வரவுள்ளன. எனவே, சில நகரங்களில் நாளை முதல் வாரம் முழுவதும் வங்கிகள் மூடப்படும். வங்கிகள் எப்போது மூடப்படும் என்பதை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க, ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறைப் பட்டியலை வெளியிடுகிறது.

தமிழக அரசு பள்ளிகளில் 2,760 தற்காலிக ஆசிரியர்கள் – பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவு!

அதேபோல், வரும் நாட்களில் வர உள்ள விடுமுறை நாட்களின் விவரங்கள் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி விடுமுறைகள் பல்வேறு மாநிலங்களில் மாறுபடும் மற்றும் அனைத்து வங்கி நிறுவனங்களால் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதனால் மக்கள் வங்கி பணிகளை திட்டமிடுவதற்கு முன்பாக தங்கள் நகரத்தில் வங்கி விடுமுறை நாட்களை அறிந்து கொள்வது அவசியம்.

Exams Daily Mobile App Download

விடுமுறை பட்டியல்:

அக்டோபர் 3 – துர்கா பூஜை (அகர்தலா, கவுகாத்தி, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி மற்றும் இம்பாலில் வங்கிகள் மூடப்படும்)

அக்டோபர் 4 – துர்கா பூஜை/தசரா (இந்தப் பின்வரும் நகரங்கள் வங்கி மூடப்படும்: அகர்தலா, புவனேஸ்வர், சென்னை, காங்டாக், குவஹாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரம்)

அக்டோபர் 5 – துர்கா பூஜை (இம்பாலைத் தவிர இந்தியா முழுவதும் வங்கி மூடப்படும்)

அக்டோபர் 6 – துர்கா பூஜை (காங்டாக்கில் வங்கிகள் மூடப்படும்)

அக்டோபர் 7 – காங்டாக்கில் வங்கி விடுமுறை

அக்டோபர் 8 – இரண்டாவது சனிக்கிழமை மற்றும் மிலாத்-இ-ஷெரிப்/ஈத்-இ-மிலாத்-உல்-நபி (முஹம்மது நபியின் பிறந்தநாள்) போபால், ஜம்மு, கொச்சி, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 9 – ஞாயிறு

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!