ஆகஸ்ட் மாதத்தில் இன்னும் 14 நாட்களுக்கு வங்கி விடுமுறை – முழு பட்டியல் விவரம்!

0
ஆகஸ்ட் மாதத்தில் இன்னும் 14 நாட்களுக்கு வங்கி விடுமுறை - முழு பட்டியல் விவரம்!
ஆகஸ்ட் மாதத்தில் இன்னும் 14 நாட்களுக்கு வங்கி விடுமுறை - முழு பட்டியல் விவரம்!
ஆகஸ்ட் மாதத்தில் இன்னும் 14 நாட்களுக்கு வங்கி விடுமுறை – முழு பட்டியல் விவரம்!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கான ஆகஸ்ட் மாத விடுமுறை நாட்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அந்த பட்டியலின் படி, இம்மாதத்தில் மீதமுள்ள நாட்களில், சுமார் 14 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது.

விடுமுறை பட்டியல்

ஒவ்வொரு மாதமும் அரசு விடுமுறை, வார இறுதி பொது விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என பல்வேறு நாட்களில் வங்கிகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படுவது உண்டு. அந்த வகையில் தற்போது துவங்கியுள்ள புதிய மாதத்தில் 15 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் வார இறுதி நாட்கள் மற்றும் மாநில அடிப்படையிலான விடுமுறைகள், பண்டிகைகள், மத கொண்டாட்டங்கள் உள்ளிட்டவை அடங்கும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் பண்டிகை காரணமாக 8 நாட்களுக்கு வங்கிகளின் செயல்பாடுகள் நிறுத்தப்பட உள்ளது.

PF தொகையில் இருந்து ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம் – EPFO அறிவிப்பு!

மற்ற 7 விடுமுறை நாட்களில் வார இறுதி மற்றும் இரண்டாவது சனிக்கிழமை உள்ளிட்டவை அடங்கும். இந்த விடுமுறை நாட்களை பொறுத்து வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை விரைந்து நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை நாட்களின் பட்டியலின் கீழ் ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளே விடுமுறையுடன் துவங்கியது. இதை தொடர்ந்து வரும் நாட்களில் அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறைகளை பொருத்தளவு,

ஆகஸ்ட் 8 – ஞாயிறு, வார இறுதி விடுமுறை.

ஆகஸ்ட் 13 – தேசபக்தர் தினத்தை முன்னிட்டு இம்பாலில் வங்கிகள் செயல்படாது.

ஆகஸ்ட் 14 – இரண்டாவது சனிக்கிழமை, விடுமுறை நாள்.

ஆகஸ்ட் 15 – ஞாயிறு, வார இறுதி விடுமுறை.

ஆகஸ்ட் 16 – பார்ஸ் புத்தாண்டு காரணமாக பெலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூர் பகுதிகளில் வங்கிகள் அடைப்பு.

ஆகஸ்ட் 19 – மொஹரம் பொது விடுமுறை.

ஆகஸ்ட் 20 – மொஹரம் மற்றும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு, சென்னை, கொச்சி மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.

ஆகஸ்ட் 21 – திருவோணம் பண்டிகை காரணமாக திருவனந்தபுரம் மற்றும் கொச்சி பகுதிகளில் வங்கிகள் இயங்காது.

ஆகஸ்ட் 22 – ஞாயிறு, பொது விடுமுறை.

TN Job “FB  Group” Join Now

ஆகஸ்ட் 23 – ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் வங்கிகளுக்கு விடுமுறை.

ஆகஸ்ட் 28 – நான்காவது சனிக்கிழமை, பொது விடுமுறை நாள்.

ஆகஸ்ட் 29 – ஞாயிறு, பொது விடுமுறை.

ஆகஸ்ட் 30 – ஜன்மாஷ்டமி, கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை காரணமாக அகமதாபாத், சண்டிகர், சென்னை, டேராடூன், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் கேங்டாக் உள்ளிட்ட பகுதிகளில் வங்கிகள் இயங்காது.

ஆகஸ்ட் 31 – ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமியை முன்னிட்டு ஹைதராபாத் நகரில் வங்கிகள் செயல்படாது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!