கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பக்ரைன் அரசு அனுமதி!

0
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - பக்ரைன் அரசு அனுமதி!
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு - பக்ரைன் அரசு அனுமதி!
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பக்ரைன் அரசு அனுமதி!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பூசிக்கு பக்ரைன் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. அதே போல உலக சுகாதார அமைப்பும் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவாக்சின் தடுப்பூசி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் 18 வயது மேற்பட்டோர்க்கு 2 டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து தொற்று பரவலை தடுக்கிறது. தடுப்பூசிகள் நல்லதொரு பலனை அளிப்பதால் தொற்று தாக்கம் குறைந்து வருகிறது. அதனால் இந்தியாவில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் செலுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

சீனியர் சிட்டிசன்கள் கவனத்திற்கு – Fixed Deposit இல் அதிக வட்டி தரும் வங்கிகள்! முழு விபரம் இதோ!

ஆனால் இதுவரை கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பல நாடுகளில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பல்வேறு நாடுகள் அனுமதி அளிக்காததால் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல முடிவதில்லை. இந்த நிலையில் பக்ரைன் அரசு அரசகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்காததால் உலக நாடுகள் கோவாக்சின் தடுப்பூசியை அனுமதிக்கவில்லை. இதனால் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தது.

மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.25,000 நிவாரணத்தொகை – முதல்வர் அறிவிப்பு!

இதனை ஏற்று பக்ரைன் அரசு கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து அந்நாட்டு இந்திய தூதரக அமைப்பு தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் கோவாக்சின் தடுப்பூசிக்கு கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அங்கீகாரம் கேட்டு, பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்தது. அதற்கான கலந்தாலோசனைகளும் நடைபெற்று வருவதால் விரைவில் கோவக்சினுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!