ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி – போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி - போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி - போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் கோபி – போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

பாக்கியலட்சுமி சீரியல் என்றாலே கோபியை கலாய்ப்பது போன்று அதிக கமெண்டுகளை ரசிகர்கள் பதிவு செய்து வருவதும், அவை மீடியாவில் ட்ரோல் ஆவதும் சகஜமாகி விட்டது. அந்த வகையில், தற்போது ராதிகா, கோபி திருமணம் செய்வது போல் வெளியான புகைப்படம் அதிகம் வைரலாகி வருகிறது.

வைரலாகும் கோபி:

பாக்கியலட்சுமி சீரியலில் குடும்பத்தின் எந்த வித ஆதரவும் இல்லாமல், படிக்காத காரணத்தால் ஒரு அடிமை போல் நடத்தப்படுகிற இல்லத்தரசியான பாக்கியாவை மையமாக வைத்து தான் கதை. அதில், பாக்கியாவின் இளைய மகன் எழில், மற்றும் மாமனார் ராமமூர்த்தி மட்டும் பாக்கியாவிற்கு சற்று ஆதரவு அளித்து வருகின்றனர். மற்றவர்கள் அனைவரும் பாக்கியா எதை செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்து திட்டிக் கொண்டு இருப்பார்கள்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ சீரியலில் செம்பருத்தி ஷபானா, மாறும் ஜோடி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஆனால் பாக்கியா தனது குடும்பத்தை மட்டுமே பெரிதாக நினைக்கிறார். ஆனால் பாக்கியாவின் கணவர் கோபி தனது குடும்பத்திற்கு தெரியாமல் ராதிகா என்ற தனது தோழியுடன் பழகி வருகிறார். இவர்கள் இருவரும் சிறு வயதில் காதலித்து வந்துள்ளனர். ஆனால் கோபியின் அப்பா வலுக்கட்டாயமாக பாக்கியாவை கோபிக்கு திருமணம் செய்து விடுகிறார். இதனால் தான் பாக்கியா மீது வெறுப்பாகவே இருப்பது போல் காட்சிகள் வரும். மேலும், தற்போது ராதிகாவிற்கும் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது.

விஜய் டிவி சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் – வைரலாகும் திருமண புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!

ராதிகா கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக விவகாரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இவர்கள் பழகுவதை ராதிகா அம்மா கண்டித்ததும் தான் கட்டாயம் ராதிகாவை திருமணம் செய்து கொள்வேன் என்று கோபி சொல்கிறார். இந்நிலையில், தற்போது கோபியும், ராதிகாவும் திருமணம் செய்து கொள்வது போல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது, இந்த மாதிரியான கதையெல்லாம் தேவை தானா?, இது என்னடா புது ட்விஸ்ட். என்னடா இங்க நடக்குது? என்று கலாய்த்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!