மனம் மாறி கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா, அதிர்ச்சியில் குடும்பம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் திருப்பங்கள்!

1
மனம் மாறி கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா, அதிர்ச்சியில் குடும்பம் - 'பாக்கியலட்சுமி' சீரியல் திருப்பங்கள்!
மனம் மாறி கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா, அதிர்ச்சியில் குடும்பம் - 'பாக்கியலட்சுமி' சீரியல் திருப்பங்கள்!
மனம் மாறி கோபியை ஏற்றுக்கொள்ளும் ராதிகா, அதிர்ச்சியில் குடும்பம் – ‘பாக்கியலட்சுமி’ சீரியல் திருப்பங்கள்!

கோபிக்கு இனி வீட்டில் இடம் கிடையாது என கூறி கோபியை பாக்கியா வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். இந்நிலையில், அனைத்தையும் தெரிந்து கொண்ட ராதிகா மனசு மாறி மீண்டும் கோபியை ஏற்றுக் கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை ராதிகா மீண்டும் ஏற்றுக்கொள்ள போகிறாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பாக்கியாவின் வாழ்க்கையை கெடுக்க கூடாது என கோபியை விட்டு முழுமையாக நீங்கிவிட வேண்டும் என்று நினைத்தார். ஆனால், தற்போது கோபியை வெறுக்கவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் ராதிகா குழப்பத்தில் இருக்கிறார். கோபியும் எப்படியாவது ராதிகாவை சமாளித்து புரிய வைத்து ராதிகாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று தான் நினைக்கிறார்.

தமிழகத்தில் காவல்துறையில் ஆர்டர்லி முறை ஒழிப்பு – அதிரடி நடவடிக்கை!

இதற்கு நடுவே பாக்கியாவும் கோபிக்கு விவாகரத்து கொடுத்ததை கோபியால் நம்பவே முடியவில்லை. என்ன தான் பாக்கியாவை விட்டு கோபி விலக வேண்டும் என்று நினைத்தாலும் பாக்கியா எப்படி நமக்கு விவாகரத்து கொடுக்கலாம், பாக்கியாவிற்கு அவ்வளவு துணிச்சலா என பாக்கியா மீது கோபி கோவமாக இருக்கிறார். இது மட்டுமல்லாமல் கோபியை வீட்டை விட்டு வெளியேறும்படி பாக்கியா கூறுகிறார். அதாவது, உங்களுக்கு பிடிக்கவில்லை என்றதும் என்னால் வீட்டை விட்டு செல்ல முடியாது இது என் வீடு என பாக்கியா கோபியிடம் கூறுகிறார்.

உடனே, கோபி இந்த வீட்டிற்காக நான் பார்த்து பார்த்து பல விஷயங்கள் செய்திருக்கிறேன். இந்த வீட்டிற்கான பணத்தை கொடுத்துவிட்டால் சென்றுவிடுவேன் என கோபி கூற பாக்கியாவும் நான் உங்களுக்கு 40 லட்சம் தருகிறேன் இப்பொழுதே வீட்டை விட்டு வெளியேறுங்கள் என கூறுகிறார். பின்னர், வீட்டை விட்டு வெளியேறிய கோபி நேராக சென்று ராதிகாவை சந்திக்கிறார். அங்கு ராதிகாவிடம் கோபிக்கு யாருமே இல்லாதது போல நாடகமாடி ராதிகாவை நம்ப வைக்கிறார். தற்போது கோபியின் வார்த்தைகளை நம்பி கோபியை மீண்டும் ராதிகா ஏற்றுக்கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. பன்னி மூஞ்சி பாக்யாவுக்கு சரியான‌ தண்டனை கோபியும் ராதிகாவும் இணைந்து வாழ்வதுதான். அப்படி நடந்தால் மிகவும் சிறப்பு…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here