‘பாக்கியலட்சமி’ சீரியல் பாக்கியா சுசித்ராவுக்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

0
'பாக்கியலட்சமி' சீரியல் பாக்கியா சுசித்ராவுக்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
'பாக்கியலட்சமி' சீரியல் பாக்கியா சுசித்ராவுக்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!
‘பாக்கியலட்சமி’ சீரியல் பாக்கியா சுசித்ராவுக்கு ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சமி’ சீரியலில் பாக்கியா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றிருக்கும் நடிகை சுசித்ரா ஒரு நாளைக்கு பெறும் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

நடிகை சுசித்ரா

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாக்கியலட்சுமி’. இதுவரை சின்னத்திரை சீரியல்களில் காட்டப்படாத ஒரு சாதாரண இல்லத்தரசியை மையமாக வைத்து இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல் எடுக்கப்பட்டு வருவதால், இதற்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம். குறிப்பாக இந்த சீரியல், வெறும் குடும்ப பெண்மணியை வைத்து மட்டுமல்லாமல், அவர் எப்படி வாழ்க்கையின் முன்னேறுகிறார், தனக்கு வரும் தடைகளை மீறி எப்படி ஜெயிக்கிறார் என்பதுடன் காதல், அன்பு, பொறுப்பு போன்ற பல அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது.

மாறனை அம்மா உடன் சேர்த்து வைக்க மகா போட்ட பிளான் – “நாம் இருவர் நமக்கு இருவர் 2” சீரியல் ப்ரோமோ!

தவிர சமீப காலமாக பள்ளி மாணவிகள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளையும் மிக அழகாக எடுத்துரைத்து மக்களிடம் இருந்து கிளாப்ஸ்களை அள்ளி கொண்டிருக்கிறது இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியல். இப்படி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கும் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் பாக்கியா என்ற கதாப்பாத்திரத்தில் 3 பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து வருபவர் நடிகை சுசித்ரா. பெங்களூருவை சொந்த ஊராக கொண்ட நடிகை சுசித்ரா தனது 14 வயதிலேயே தனது சினிமா பயணத்தை துவங்கி இருக்கிறார்.

அந்த வகையில் கன்னடத்தில் காவியாஞ்சலி, ராதா ரமணா, மாங்கல்யா, ஈஸ்வரி மற்றும் தெலுங்கில் நாகாம்மா, பந்தம், மௌன ராகம், அபிலாஷா போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். இப்படி பல மொழி சீரியல்களில் பிரபலமாக இருந்து வரும் நடிகை சுசித்ராவை முதலாவதாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது, இயக்குனர் AL விஜயின் இயக்கத்தில் உருவான ‘சைவம்’ திரைப்படம் தான்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் கம்ப்யூட்டர் சார் யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல கன்னட திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த சுசித்ராவை மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கொண்டு வந்து சேர்த்தது விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல். இத்தொடரில் 3 பிள்ளைகளுக்கு அம்மாவாக, ஒரு அப்பாவியான அதே நேரத்தில் தைரியம் மிக்கவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் நடிகை சுசித்ரா. இப்படி கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக ‘பாக்கியலட்சுமி’ தொடரில் தனது பங்களிப்பை கொடுத்து வரும் நடிகை சுசித்ராவுக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.9 ஆயிரம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!