‘பாக்கியலட்சுமி’ நடிகை சுசித்ரா ரெட்டி கொடுத்த அட்வைஸ் – ரசிகர்கள் உற்சாகம்!

0
'பாக்கியலட்சுமி' நடிகை சுசித்ரா ரெட்டி கொடுத்த அட்வைஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
'பாக்கியலட்சுமி' நடிகை சுசித்ரா ரெட்டி கொடுத்த அட்வைஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
‘பாக்கியலட்சுமி’ நடிகை சுசித்ரா ரெட்டி கொடுத்த அட்வைஸ் – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் லீட் ரோலில் நடித்து வரும் நடிகை சுசித்ரா ரெட்டி, ஒருவர் மீது திணிக்கப்படும் கோபம் கண்டிப்புக்கு உரியது என வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு ஒன்று தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

சுசித்ரா ரெட்டி

பொதுவாக திரைப்படங்களில் மட்டுமே சமூக கருத்துக்கள், விழிப்புணர்வு உண்டாக்கக்கூடிய சில விஷயங்களை நாம் கண்டிருப்போம். இது போன்ற நல்ல விஷயங்களை சின்னத்திரை தொடர்களுக்கு எடுத்து வந்தது விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தான். இந்த சீரியலை பொருத்த அளவில் பாக்கியா என்ற குடும்பத் தலைவி சந்திக்கும் பிரச்சனைகள், அவமானங்கள், துரோகங்கள் போன்ற கதைக்களத்துடன் ஒரு புறம் நகர்ந்து வர, இன்றைய இளைய சமூகத்திற்கு தேவையான சில விஷயங்களும் இந்த சீரியலில் அவ்வப்போது ஓங்கிய குரலுடன் ஒளித்து வருகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவாவை தன் பக்கம் இழுத்த மாமனார் – சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?

அதாவது, கணவனை கண் கண்ட தெய்வமாக மதிக்கும் மனைவிக்கு கணவர் செய்யும் துரோகம், விதவை பெண்ணின் மறுமணம், பாலியல் குற்றங்கள், கணவனை விவகாரத்து செய்து நண்பரால் ஏமாற்றப்படும் பெண் உள்ளிட்ட பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கதைக்கு ஏகப்பட்ட கிளாப்ஸ் கிடைத்து வருகிறது. இத்தொடரில் பாக்கியா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து கொண்டிருப்பவர் பிரபல சீரியல் நடிகை சுசித்ரா ரெட்டி. இவரது கதாப்பாத்திரம் பல்வேறு பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்திருக்க இவரை பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சுசித்ரா ரெட்டி அவ்வப்போது சில பாசிட்டிவ் கருத்துக்களை மக்களிடம் ஷேர் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, ‘சகித்துக்கொள்வது கொடுங்குற்றமாகும். ஏனென்றால் உங்களை யாரவது ஒருவர் முறைகேடாக அல்லது தவறாக நடத்தும் போது, கோபப்படும் போது அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம். எந்த வழிகளிலாவது அதற்கு எதிர்ப்பு தெரிவியுங்கள். அவர்களது கோபம் அவர்களை அழித்து விடும். அந்த தீமையே அவர்களை தள்ளி விடும்’ என்று இவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு ஒன்று ரசிகர்களின் வரவேற்புகளை பெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here