ராதிகாவிற்கு வாங்கிய புடவையை பாக்கியாவிற்கு கொடுத்து ஏமாற்றும் கோபி – இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று கோபி ராதிகாவுக்கு வாங்கி இருக்கும் புடவையை காரில் வைத்து விட்டு வந்து விடுகிறார். இதனை எடுக்கும் பாக்கியா அது குறித்து கோபியிடம் கேட்கிறார்.
“பாக்கியலட்சுமி” சீரியல்:
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்றைய எபிசோடில் கோபியிடம் இனியா வித்தியாசமான நறுமணம் வருகிறது என்று கூறுகிறார். இதனை கேட்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது கோபி அனைவரையும் சமாளித்து விட்டு தனது ரூமிற்கு சென்று விடுகிறார். பின்னர், பாக்கியா தன்னை தானே சமாதானம் செய்து கொள்கிறார். செல்வி கூறியது பொய்யாக தான் இருக்கும் என்று மீண்டும் மீண்டும் சொல்லி கொள்கிறார். பின்னர், கோபியிடம் சென்று அவரது லஞ்ச் பாக்ஸ் பற்றி கேட்கிறார்.
செப்.13 வரை இரவு, வார இறுதி ஊரடங்கு நீட்டிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
அது காரில் இருக்கிறது என்று கோபி கூறியதும் பாக்கியா சென்று எடுத்து கொள்கிறார். அப்போது அருகில் ஒரு கட்டபையில் புடவை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதுவும் செல்வி கூறிய அதே கடையில் இருந்து புடவை வாங்கி இருப்பதால் மிகவும் ஷாக் ஆகிறார். அப்போது ராதிகா கோபிக்கு போன் செய்து தான் புடவையை அப்படியே காரில் வைத்து விட்டு வந்ததாக கூறுகிறார். இதனை கேட்டு கோபி அதிர்ச்சி அடையும் சமயம் பாக்கியா உள்ளே வந்து புடவை பற்றி கேட்கிறார்.
TN Job “FB
Group” Join Now
தனது வாய்க்கு வந்த பொய்யை கூறி கோபி பாக்கியவை சமாளிக்கிறார். பின்னர், இது பாக்கியாவிற்கு வாங்கி வந்த புடவை என்று கூறுகிறார். இதனை கேட்டு விட்டு பாக்கியா மிகவும் சந்தோசம் அடைகிறார். பின்னர், கோபி தன்னை ஏமாற்ற மாட்டார் என்று பாக்கியா தன்னை சமாதானம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார். பின்னர், அந்த புடவையினை வீட்டினரிடம் காட்டி மகிழ்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.