விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ கோபியின் முதல் சீரியல் புகைப்படம் – வியந்து பார்த்த ரசிகர்கள்!
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் சதிஷ் நடித்த முதல் சீரியலான மந்திரவாசல் தொடரின் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி கோபி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தன்னை மட்டுமே உலகம் என்று நினைத்து வாழும் அப்பாவி மனைவியை விட்டுவிட்டு வேறு பெண்ணை தேடி செல்வது போல கதை வேறு விதமான டிராக்கில் பயணித்து கொண்டிருக்கிறது. பெரும்பாலானோர் கோபியின் நடிப்பை தான் விரும்பி பார்த்து கொண்டிருக்கின்றனர். பாக்கியாவிற்கும் தெரியாமல் ராதிகாவிற்கும் துளி கூட சந்தேகம் வராமல் தப்பித்து கொண்டிருக்கும் கோபியின் கதாபாத்திரம் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
கோபியை விட்டு விலகும் ராதிகா – பல திருப்பங்களுடன் ‘பாக்கியலட்சுமி’ சீரியல்! ரசிகர்கள் உற்சாகம்!
இவருக்கு பதிலாக வேறு யாராவது நடக்க ஒப்பந்தமாகியிருந்தால் கூட பாக்கியலட்சுமி தொடர் இந்த அளவிற்கு ரீச் ஆகியிருக்குமா என்பது சந்தேகமே. கோபியின் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் சதிஷ் இந்த சீரியலில் அறிமுகமாகும் முன்னரே பல சீரியல்களில் நடித்திருக்கிறார். சீரியல்களில் மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் சதிஷ் நடித்திருக்கிறார். அதாவது 1999 ஆம் ஆண்டில் வெளியான மின்சார பூவே திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார். இதற்கு பிறகு சதீஸுக்கு சீரியல்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் மந்திர வாசல் சீரியல் மூலமாகவே சின்னத்திரையிலும் அறிமுகமானார். தற்போது மந்திரவாசல் சீரியலின் போஸ்டர் ரசிகர்களின் மத்தியில் வெளியாகி வைரலாகி வருகிறது. பாக்கியலட்சுமி கோபியா இது என ரசிகர்கள் பலரும் வியந்து பார்க்கின்றனர். இந்த சீரியல்களை தொடர்ந்து சூலம், ஆனந்தம், கல்யாண பரிசு, மகாராணி ஆகிய சீரியல்களிலும் கோபி நடித்திருக்கிறார். ஆனால் சதீஷின் புகழை பரப்பியது நிச்சயமாக பாக்கியலட்சுமி சீரியல் தான்.