அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – ஆதார் இணைப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - ஆதார் இணைப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - ஆதார் இணைப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – ஆதார் இணைப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு!

மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு வரும் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறைகளை மேற்கொள்வதற்கான எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆதார் அட்டை

இதுவரை ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்காத ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் படி இப்போது ரேஷன் கார்டுகளுடன் ஆதார் இணைக்கும் காலக்கெடு மார்ச் 31 முதல் ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ரேஷன் கார்டுகளுடன் ஆதார் கார்டுகளை இணைப்பதன் மூலம் பயனாளிகள் உணவு தானியங்களின் பங்கை தடையில்லாமல் பெற்றுக்கொள்ள முடியும். இது தவிர இந்த சேவைகளின் மூலம் ரேஷன் கார்டுதாரர்கள் அரசின் பல சலுகைகளை பெறுகின்றனர்.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!

இப்போது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்த மக்கள் தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்து உரிமையுள்ள உணவு தானியங்களின் நன்மைகளை பெறுவதற்கு ரேஷன் கார்டுகளுடன் ஆதார் அட்டைகளை இணைப்பது இன்றியமையாதது ஆகும். அந்த வகையில் இச்சேவைகளை பெற்றுக்கொள்ள ஆதார் அட்டையுடன் இன்னும் ரேஷன் கார்டை இணைக்காதவர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, மார்ச் 31 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடுவை ஜூன் 30 ஆம் தேதி வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டம் ஆகஸ்ட் 2019 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தினசரி கூலித் தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர்களுக்கு எளிய முறையில் மானிய உணவு தானியங்களை பெற உதவுகிறது. இந்த ONORC திட்டத்தின் கீழ் இதுவரை 96 சதவீத பயனாளிகள் பதிவு செய்யதுள்ளனர். இது 100 சதவீதமாக மாற வேண்டும் என்பதால் இந்த நீட்டிப்பு மேலும் மூன்று மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்க தேவையான ஆவணங்கள்:

  • குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
  • அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல்
  • குடும்பத் தலைவரின் ஆதார் நகல்
  • அசல் அட்டையுடன் ரேஷன் கார்டின் நகல்

ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளை ஆஃப்லைனில் இணைக்க:

  • அருகிலுள்ள PDS மையம் அல்லது ரேஷன் கடைக்கு செல்லவும்
  • உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டையின் நகல்களுடன்
  • உங்கள் ரேஷன் கார்டின் நகல்களையும் எடுத்து செல்லுங்கள்.
  • குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் அவசியம்.
  • வங்கிக் கணக்கு ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றால், உங்கள் வங்கி கடவுச்சீட்டின் நகலைச் சமர்ப்பிக்கவும்
  • PDS கடையில் ஆவணங்களை சமர்ப்பிக்கவும்

ஆன்லைனில் இணைக்க:

  • PDS இன் இணையதளத்தை திறக்கவும்.
  • ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடவும்
  • ஆதார் எண்ணை கொடுக்கவும்.
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்
  • தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட மொபைலுக்கு OTP அனுப்பப்படும்
  • அந்த OTP ஐ உள்ளிட்டு உங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கவும்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!