திருமணம் குறித்து மனம் திறந்த “பாக்கியலட்சுமி” இனியா – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

1
திருமணம் குறித்து மனம் திறந்த
திருமணம் குறித்து மனம் திறந்த "பாக்கியலட்சுமி" இனியா - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
திருமணம் குறித்து மனம் திறந்த “பாக்கியலட்சுமி” இனியா – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் பள்ளி மாணவியாக நடித்து வரும் நேஹா மேனனிற்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் பரவியது. அது குறித்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் விளக்கம் ஒன்றை தெரிவித்துள்ளார்.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலான பாக்கியலட்சுமியில் குடும்ப பெண்கள் படுகிற கஷ்டங்கள் பற்றியும், குடும்பத்தில் அனைத்து வேலைகளையும் செய்தும் அவர்கள் அவமானப்படுத்தப்படுவதும் அதில் இருந்து அவர்கள் மீண்டு தங்களது கனவுகளை எவ்வாறு நிறைவேற்றி கொள்வார்கள் என்பது பற்றி கதைக்களம் அமைந்துள்ளது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான பாக்கியாவாக பிரபல நடிகை சுஜித்ரா நடிக்கிறார்.

தீபாவளி ரேஸில் இருந்து விலகிய சிம்புவின் ‘மாநாடு’ – ரசிகர்கள் அதிர்ச்சி!

மேலும் அவருக்கு கணவரான கோபி கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். பின் அவரது 3 குழந்தைகளாக செழியன், எழில், இனியா கதாபாத்திரத்தில் ஆர்யன், விஷால், நேஹா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த கதாபாத்திரத்தில் நேஹா ஸ்கூல் மாணவியாக நடித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் தங்கை பிறந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தொடர்ந்து பல போட்டோஷூட்களை நடத்தி வருகிறார்.

கண்ணனை பற்றி பெருமையாக பேசும் தனம், குழந்தையை கொஞ்சும் குடும்பத்தினர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

இந்த வகையில் அவர் நடத்திய திருமண கோலத்தில் போட்டோஷூட் பார்த்த ஒரு சிலர் அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகளை பரப்பினர். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அந்த செய்தியை ஷேர் செய்து, என்ன என்ன சொல்றான் பாருங்க என நக்கலாக கேப்சன் போட்டு பதிவிட்டுள்ளார். பொதுவாக சினிமாவில் கிசு கிசு அதிகமாக இருக்கும் அதை அவர் சீரியஸாக எடுக்காமல் இருந்ததால் அதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!