தீபாவளி ரேஸில் இருந்து விலகிய சிம்புவின் ‘மாநாடு’ – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
தீபாவளி ரேஸில் இருந்து விலகிய சிம்புவின் 'மாநாடு' - ரசிகர்கள் அதிர்ச்சி!
தீபாவளி ரேஸில் இருந்து விலகிய சிம்புவின் 'மாநாடு' - ரசிகர்கள் அதிர்ச்சி!
தீபாவளி ரேஸில் இருந்து விலகிய சிம்புவின் ‘மாநாடு’ – ரசிகர்கள் அதிர்ச்சி!

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் மாநாடு. தற்போது மாநாடு திரைப்படம் வெளியாகும் தேதி மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

மாநாடு ரிலீஸ்:

தமிழகத்தில் மக்கள் அனைவராலும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. அன்று மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்தும் விழாவை கொண்டாடுவது வழக்கம். அதனை தொடர்ந்து தீபாவளி பண்டிகையில் திரைப்படங்களுக்கு செல்வதும் வழக்கமான ஒன்றாகி வருகிறது. தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. சில ஆண்டுகளாக தொடர்ந்து திரைப்படம் எதுவும் வெளியாகாத நிலையிலும் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது பெரும் வியப்பளித்தது.

கண்ணனை பற்றி பெருமையாக பேசும் தனம், குழந்தையை கொஞ்சும் குடும்பத்தினர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ!

இந்நிலையில் தீபாவளி அன்று வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் வெளியாகும் என்ற செய்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதே சமயம் தமிழ் சினிமாவின் உச்சமாக இருக்கும் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளியாகிறது. எனவே மாநாடு திரைப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. இது குறித்து V House Production சார்பில் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தங்க நகைகளுடன் ஜொலிக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் சுசித்ரா – வைரலாகும் புகைப்படங்கள்!

அதில் மாநாடு திரைப்படம் நன்றாகவும், திருப்தியாகவும் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். படத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக கூறிய அவர் வியாபார ஒப்பந்தம் செய்தவர்கள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக இந்த கடினமான முடிவை மேற்கொண்டதாக கூறியுள்ளார். சில காரணங்களுக்காக வெற்றி பெற வேண்டிய படம் ஏன் பலியாக வேண்டும் என்று கூறிய அவர் படம் நவம்பர் 25ம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் திரைப்படங்களின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!