விஜய் டிவி சீரியல்களில் முதலிடம் பிடித்த “பாக்கியலட்சுமி” சீரியல் – வெளியான TRP பட்டியல்!

0
விஜய் டிவி சீரியல்களில் முதலிடம் பிடித்த
விஜய் டிவி சீரியல்களில் முதலிடம் பிடித்த "பாக்கியலட்சுமி" சீரியல் - வெளியான TRP பட்டியல்!
விஜய் டிவி சீரியல்களில் முதலிடம் பிடித்த “பாக்கியலட்சுமி” சீரியல் – வெளியான TRP பட்டியல்!

விஜய் டிவி சீரியல்கள் என்றாலே புதுமையான கதையுடன் ஒளிபரப்பாகி வருவதால் ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த சீரியல்களுக்கு இருக்கின்றனர். அந்த வகையில் வாரந்தோறும் ஒளிபரப்பான சீரியல்களில் மக்களின் மனம் கவர்ந்த சீரியல் TRP பட்டியல்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

TRP பட்டியல்:

தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் இருந்தாலும் விஜய் டிவி, சன் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு இருக்கிறது. பல சீரியல்கள் குடும்பக் கதையை தழுவி எடுக்கப்படுவதால் பலர் சீரியல்களை விரும்பி பார்க்கின்றனர். குறிப்பாக விஜய் டிவி சீரியல்களுக்கு பல குடும்ப ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்கள் TRP பட்டியலில் தொடர்ந்து போட்டி போட்டு வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் ஒவ்வொரு சீரியலும் வாரந்தோறும் புது திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருவதால் TRPயில் மாற்றங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 26 வது வாரத்திற்கான TRP பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் 8.9 புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை 7.8 புள்ளிகளுடன் பாரதி கண்ணம்மா சீரியல் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 7.5 புள்ளிகளுடன் பிடித்துள்ளது.

மூட்டை தூக்கும் கதிர், தையல் வேலை செய்யும் முல்லை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!

அதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தை தமிழும் சரஸ்வதியும் சீரியல் 6.5 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஐந்தாம் இடத்தை 6.0 புள்ளிகளுடன் ஈரமான ரோஜாவே சீரியல் பிடித்துள்ளது. ஏழாம் இடத்தை ராஜா ராணி 2 சீரியல் 6.0 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. எட்டாம் இடத்தை மௌன ராகம் 2 சீரியல் 5.7 புள்ளிகளுடன் பிடித்துள்ளது. ஒன்பதாம் இடத்தை தென்றல் வந்து என்னை தொடும் சீரியலும், பத்தாம் இடத்தை முத்தழகு சீரியலும் பிடித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!