
சமையல் ஆர்டரில் ஜெயித்து கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா – இல்லத்தரசிகளின் ரோல்மாடல் பாக்கியலட்சுமி!
ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த அவ்வளவாக படிக்காத ஒரு குடும்பத் தலைவியான பாக்கியலட்சுமி தொடரில் வரும் பாக்கியா பெண்களுக்கு ரோல்மாடலாக பாராட்டப்பட்டு வருகிறார்.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒரு சராசரி பெண்ணின் வேதனைகள் மற்றும் ஆசைகளை மிகவும் அழகாக எடுத்து காட்டி வரும் சீரியல் என்றால் அது ‘பாக்கியலட்சுமி’ தான். இந்த சீரியலில் தற்போது கதாநாயகி பாக்கியா சமையல் பிசினஸ் செய்து வருகிறார். இதற்கு வீட்டினர் பல எதிர்ப்புகளை தெரிவித்து வந்தாலும் பாக்கியா தனது விடாமுயற்சியின் காரணமாக செய்து முடித்து வருகிறார். தற்போது இவருக்கு அடுத்த கட்டமாக ராஜசேகர் என்பவரிடம் இருந்து பெரிய சமையல் ஆர்டர் ஒன்று கிடைக்கிறது.
IPL 2021 – RR vs RCB: பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி!
இதனால் உச்சகட்ட மகிழ்ச்சியில் பாக்கியா இருந்து வருகிறார். ஆனால் வழக்கம் போல் பாக்கியாவால் இதை செய்ய முடியாது என்று கோபி, செழியன், இனியா, மாமியார் கிண்டல் செய்ய பாக்கியாவுக்கு ஜெனி, எழில், அம்ரிதா துணை நிற்கின்றனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சமையலை சரியான நேரத்தில் முடித்து அதை தொழிலதிபர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அனுப்பி வைக்கிறார். அதை சாப்பிட்டு பார்த்த ராஜசேகர், சமையல் பிரமாதமாக இருப்பதாக பாராட்டுகிறார்.
மாணவர்களை காப்பது அரசின் கடமை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிக்கை!
இதனால் கேட்ட பணத்தை விட பாக்கியாவிற்கு அதிக லாபம் கிடைக்கிறது. அனைத்து போராட்டங்களையும் தாண்டி தான் ஜெயித்து விட்ட நிம்மதியில் பாக்கியலட்சுமி கம்பீரமாக நடந்து வருவதை போல் காட்சிகள் தொடரில் உள்ளது. பாக்கியாவை வழக்கம் போல் குறைவாக மதிப்பிட்ட கோபி முகத்தில் பாக்கியா தனது வெற்றியின் மூலம் கரியை பூசியுள்ளார். தன்னம்பிக்கை நிறைந்த பாக்கியா தான் தற்போது பல இல்லத்தரசிகளின் ரோல் மாடலாக இருக்கிறார்.