ஜெனியை செழியனுடன் அனுப்ப மறுக்கும் ஜோசப்,கோவத்தில் ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ஜெனியை செழியனுடன் அனுப்ப மறுக்கும் ஜோசப்,கோவத்தில் ஈஸ்வரி - இன்றைய
ஜெனியை செழியனுடன் அனுப்ப மறுக்கும் ஜோசப்,கோவத்தில் ஈஸ்வரி - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ஜெனியை செழியனுடன் அனுப்ப மறுக்கும் ஜோசப்,கோவத்தில் ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியன் ஜெனியை வீட்டிற்கு அழைத்து செல்ல வர, ஜோசப் மரியம் அனுப்ப மறுக்கிறார்கள்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனியை என்னுடன் வீட்டிற்கு அழைத்து செல்ல வந்திருக்கேன் என செழியன் சொல்ல, ஜோசப் மற்றும் மரியம் அனுப்ப மறுக்கிறார். செழியன் என்ன நடந்தது என தெரியாமல் இருக்க ஜோசப் ஒரு மாசமாக இருக்கும் பொண்டாட்டியை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ஆனால் நீங்க எப்படி நடந்திருக்கீங்க என கேட்கிறார். ஜெனி மரியம் வயிற்றில் இருக்கும் போது எப்படி நான் பார்த்துக் கொண்டேன் என தெரியுமா, நீங்க அடுத்த ஜெனரேஷன் எப்படி இருக்க வேண்டும் என கேட்கிறார்.

என்னை பற்றி தப்பாக எல்லாரிடமும் சொல்லிவிட்டாய் என ஜெனியை கேள்வி கேட்க, ஜெனியிடம் கேள்வி கேட்காதீங்க என ஜோசப் சொல்கிறார். பின் வீட்டிற்கு வரவே மாட்டியா ஜெனி என கேட்க, ஜோசப் நாங்க உங்க வீட்டிற்கு அனுப்பவே மாட்டேன் என சொல்லிவிடுகிறார். பின் வீட்டிற்கு வந்த செழியனிடம் பாட்டி தாத்தா ஏன் இப்படி இருக்க என கேட்கிறார். எங்கே போயிட்டு வர என கேட்க, ஜெனி வீட்டிற்கு தான் என சொல்கிறார். ஜெனி உன்னுடன் வரவில்லையா என கேட்க, அவளை அனுப்பவே மாட்டேன் என அவள் அப்பா சொல்லிவிட்டார் என சொல்கிறார்.

மீனாவின் மனதை மாற்றும் ஜனார்த்தனன், கயலை ஒதுக்குவதால் வருத்தத்தில் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின் ஈஸ்வரி கோவப்பட, அவங்க அப்பா கோவமாக பேசினாரா என கேட்கிறார். ஆமாம் என செழியன் சொல்ல, நான் ஜெனியை கூப்பிட தான் போனேன் ஆனால் அவங்க என்னிடம் சரியாக பேசவில்லை என்னை மதிக்க கூட இல்லை, ஜெனியும் என்னிடம் பேசவில்லை என சொல்கிறார் . தாத்தா சரி விடு என சொல்ல ஈஸ்வரி கோபப்படுகிறார். ஈஸ்வரி ஜெனிக்கு போன் பண்ணி கொடு என கேட்க, ஜெனி இனிமேல் இங்கே வரவே கூடாது. நீ இனிமேல் அங்கே போகவே போகாத என உசுப்பேத்தி விடுகிறார்.

இதை எல்லாம் பார்த்து பாக்கியா வருத்தமாக இருக்கிறார். ஒரு பக்கம் ஜெனி அப்பா மற்றொரு பக்கம் பாட்டி என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இரவு எழில் தூங்க வர செழியன் என்னுடன் வந்து தூங்கு என அழைத்து செல்கிறார். எழில் உனக்கு என்ன பிரச்சனை ஜெனி இல்லையென்றால் உன்னால் தனியாக தூங்க முடியாத என கேட்கிறார். அம்மா எல்லாம் சொன்னாங்க என எழில் சொல்ல, பாக்கியா உனக்கு மட்டும் தான் ஆதரவாக இருப்பார் என செழியன் சொல்கிறார்.

பின் எழில் நீயும் ஜெனியும் இருந்தால் ஜெனிக்கு தான் நான் சப்போர்ட் செய்வேன் என சொல்கிறார். அவங்க வீட்டிற்கு நான் சென்றேன் அவள் வரமாட்டேன் என சொல்லிவிட்டால் தெரியுமா என செழியன் கேட்க, எழில் அவங்க மனம் உடல் ரீதியாக கஷ்டத்தில் இருப்பாங்க அவங்களே சரியாகி வந்துவிடுவார்கள் என சொல்கிறார். பின் செழியன் யாருக்கும் என் மீது அக்கறை இல்லை என சொல்ல, எழில் அங்கிருந்து கிளம்புகிறார். மீண்டும் எழில் கதவை தட்ட, செழியன் கதவை திறக்கிறார். உன்னுடன் மனிதன் வாழ்வாங்களா என எழில் கேட்க, செழியன் செம கடுப்பில் இருக்கேன் என கதவை மூட்டுகிறார்.

அஞ்சலி மருந்து சீட்டில் இருப்பது பாரதி கையெழுத்து இல்லை, உண்மையை சொன்ன கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

மறுபக்கம் பாக்கியா கோபியிடம் உங்களிடம் பேச வேண்டும் என சொல்ல,பேசலாம் என கோபி பாக்கியாவை உக்கார சொல்கிறார். செழியன் பற்றி தான் பேச வந்தேன் ஜெனி இல்லாமல் அவனால் இருக்க முடியவில்லை. என்னை கூட்டிக் கொண்டு வர சொன்னான் நான் முடியாது என சொல்லிவிட்டேன். செழியன் சென்று கூப்பிட்ட போது அவங்க அப்பா சரியாக பேசவில்லை. இங்கே அத்தை ரொம்ப கோவமாக இருக்காங்க. நாம ஒரு நாள் சென்று ஜெனியை பார்த்துவிட்டு வருவோம்.

இரண்டு குடும்பத்திற்கும் சண்டை வந்துவிடும் போல இருக்கிறது. ஜெனியை பார்த்துவிட்டு மட்டும் வருவோம் அவளை கண்டிப்பாக வர வேண்டும் என சொல்ல வேண்டாம் என சொல்கிறார். நீ சொல்வது எனக்கு புரிகிறது என கோபி சொல்ல, அந்த நேரம் பார்த்து ராதிகா போன் செய்கிறார். கோபி எப்போ போகலாம் என கேட்க, பாக்கியா நாளைக்கு சாயங்காலம் போகலாம் என சொல்கிறார். பின் கோபிக்கு மீண்டும் போன் வர கோபி பேசுமால் இருக்கிறார். மீண்டும் கோபிக்கு போன் வருகிறது. ராதிகா நாளைக்கு கார் எடுக்க போகலாம் என கூப்பிடுகிறார். கோபி என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!