அஞ்சலி மருந்து சீட்டில் இருப்பது பாரதி கையெழுத்து இல்லை, உண்மையை சொன்ன கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
அஞ்சலி மருந்து சீட்டில் இருப்பது பாரதி கையெழுத்து இல்லை, உண்மையை சொன்ன கண்ணம்மா - இன்றைய
அஞ்சலி மருந்து சீட்டில் இருப்பது பாரதி கையெழுத்து இல்லை, உண்மையை சொன்ன கண்ணம்மா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
அஞ்சலி மருந்து சீட்டில் இருப்பது பாரதி கையெழுத்து இல்லை, உண்மையை சொன்ன கண்ணம்மா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா அஞ்சலியை மாத்திரை போட சொல்கிறார். உடனே அஞ்சலி மருந்து சீட்டை கொடுக்க இது பாரதி கையெழுத்து இல்லை என சொல்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், கண்ணம்மா அஞ்சலிக்கு கஷாயம் கொண்டு வந்து கொடுக்கிறார். அஞ்சலியை அதை பிடிக்காமல் குடிக்க அத்தை உன்னை எப்படி இதெல்லாம் கொடுக்காமல் விட்டாங்க, நான் மாசமாக இருக்கும் போது என்னை விடவே மாட்டாங்க என சொல்ல, அஞ்சலி அத்தை எனக்கும் கொடுப்பாங்க என சொல்லி கஷாயத்தை குடிக்கிறார். பின் கண்ணம்மா அஞ்சலியிடம் மாத்திரை எதுவும் போடாமல் இருக்கிறாய் எடுத்து போடு என சொல்கிறார்.

அஞ்சலி இல்லை மாத்திரை தீர்ந்துவிட்டது என சொல்ல, வீட்டில் ஒரு டாக்டர் வைத்துக் கொண்டு ஏன் இப்படி இருக்க என கண்ணம்மா கேட்கிறார். சரி மருந்து சீட்டை கொடு நான் சென்று வாங்கி வருகிறேன் என கண்ணம்மா கேட்க அஞ்சலி கொடுக்கிறார். கண்ணம்மா அதை வாங்கி பார்த்து இதில் பாரதி பெயர் இருக்கிறது ஆனால் அவருடைய கையெழுத்து இல்லை என சொல்கிறார். உடனே அஞ்சலி வெண்பா செய்த வேலையை உணர்ந்து இப்போதைக்கு எதுவும் சொல்லவேண்டாம் என நினைக்கிறார்.

தமிழகத்தில் அக்.23ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அப்போது அஞ்சலி இந்த மாத்திரையை சாப்பிட்டால் தல சுத்துது வாந்தி வருது என அஞ்சலி சொல்ல, எனக்கும் கர்ப்பமாக இருக்கும் போது அந்த பிரச்சனை இருந்தது, இங்க வீட்டு பக்கத்தில் ஒரு சித்த மருத்துவர் இருக்கார் அவங்களிடம் பார்க்கலாம் என சொல்கிறார். பின் சௌந்தர்யா வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை பற்றி பேசுகிறார். அப்போது வேணு குற்றாலம் போயிட்டு வரலாம் என சொல்ல, சௌந்தர்யா வீட்டில் இவ்வளவு பிரச்சனை இருக்கிறது. பாரதி என்ன சொல்ல போகிறானா என நினைத்து பதட்டம் அடைகிறார்.

விவாகரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரில் ஆன்மிக சுற்றுலா சென்ற சமந்தா – ரசிகர்கள் வாழ்த்து!

பின் ஹேமா மற்றும் லட்சுமி சந்தோசமாக விளையாட அஞ்சலி சீக்கிரம் ஒரு முடிவு எடுத்து நீயும் பாரதி மாமாவும் சேர வேண்டும் என சொல்ல, இதை உன் டாக்டர் ஒருவர் வீட்டில் இருக்காரே அவரிடம் சொல்லு என சொல்கிறார். பின் கண்ணம்மா ஹேமா லட்சுமிக்கு கதை சொல்லி தூங்க வைக்கிறார். பாரதிக்கு ஹேமா நினைப்பாக இருக்க, அவசரப்பட்டு ஹேமாவை அனுப்பி வைத்துவிட்டேன். நான் நிலைகுலைந்து இருக்கும் போது ஹேமா தான் எனக்கு ஆதரவாக இருந்தாள். நாளைக்கு முதல் வேலையாய் அஞ்சலி வீட்டிற்கு சென்று ஹேமாவை அழைத்து வர வேண்டும் என நினைக்கிறார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!