ஜெனி அம்மா வந்ததால் வருத்தப்பட்ட செழியன், ஸ்கூல் பீஸ் கட்ட சொல்லும் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
ஜெனி அம்மா வந்ததால் வருத்தப்பட்ட செழியன், ஸ்கூல் பீஸ் கட்ட சொல்லும் இனியா - இன்றைய
ஜெனி அம்மா வந்ததால் வருத்தப்பட்ட செழியன், ஸ்கூல் பீஸ் கட்ட சொல்லும் இனியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
ஜெனி அம்மா வந்ததால் வருத்தப்பட்ட செழியன், ஸ்கூல் பீஸ் கட்ட சொல்லும் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியன் ஜெனியின் அம்மா வீட்டிற்கு வந்துவிட்டு சென்றதை நினைத்து வருத்தப்பட, இதற்கு பாக்கியா தான் காரணம் என கோவப்படுகிறார். உடனே ஜெனி பாக்கியா மீது தவறு இல்லை என ஆதரவாக பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் வருகிறது. மறுபக்கம் இனியா ஸ்கூல் பீஸ் பற்றி பாக்கியாவிடம் சொல்கிறார்

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், செழியன் ஜெனியிடம் உங்க அம்மா வந்து என்ன இப்படி கேட்டாங்க என சொல்ல, ஜெனி ஆமாம் வந்ததும் இல்லாமல் இப்படி ஓப்பனாக கேட்டுவிட்டார்கள் நான் பேசி சமாளித்துவிட்டேன் நீ கவலைப்படாதே என சொல்ல, செழியன் நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா, யாருக்கும் தெரிய கூடாது என நினைத்தேன் என சொல்கிறார். அதெல்லாம் நினைத்து கவலைப்படாதே எப்படி இருந்தாலும் தெரிய தான் போகிறது என சொல்கிறார் ஜெனி. ஆனால் அப்பா இல்லாமல் வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை அவரை மிஸ் செய்வதாக சொல்ல, ஆனால் அங்கிள் அதை பற்றி நினைக்கவே இல்லை.

உனக்கு ஒரு போன் கூட செய்யவில்லை நேராக ராதிகா வீட்டிற்கு சென்றதாக பாட்டி சொன்னதாக ஜெனி செல்ல, ஆமாம் போனார் அம்மா வெளியே போக சொன்னதால் தான் எல்லாம் நடந்தது அம்மா கொஞ்சம் இறங்கி வந்திருக்கலாம். எனக்கு அவங்களை பார்த்தாலே வெறுப்பாக இருப்பதாக சொல்ல அப்படி எல்லாம் பேசாதே என ஜெனி சொல்கிறார். பேசாமல் உன் அம்மா சொன்னது போல உன் வீட்டுக்கே போயிருவோம் என செழியன் சொல்ல, குடும்பத்தில் எல்லாரும் நீ போனால் என்ன நினைப்பார்கள் என ஜெனி கேட்க கொஞ்ச நாள் போறதாக சொல்லிவிட்டு போவோம் என செழியன் சொல்கிறார். ஆனால் ஜெனி நான் வரமாட்டேன் இந்த குடும்பத்தை நன்றாக வைத்து கொள்ளும் பொறுப்பு இருப்பதாக சொல்கிறார்

மறுபக்கம் ஈஸ்வரிக்கு கோபி போன் செய்கிறார். ஈஸ்வரி போனை எடுத்து அழ உடனே கோபி அழாதீங்க என சொல்கிறார். ஈஸ்வரி சம்மந்தி வரை எல்லாம் தெரிந்துவிட்டதாக சொல்ல, என்ன சொன்னாங்க என கோபி கேட்கிறார். அவங்களுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என ஈஸ்வரி சொல்ல, எல்லாம் என் தலை எழுத்து என கோபி சொல்கிறார். எல்லாம் சரியாகிவிடும் என ஈஸ்வரி சொல்ல, எங்கே இருக்கிறாய் என கேட்கிறார். கோபி நான் காரில் தான் இருப்பதாக சொல்ல, ரூம் எடுத்து தங்கு காரில் இருந்தால் சரியாக வராது என சொல்ல கோபி சரி என சொல்கிறார். பின் இனியா வந்து யாரு என கேட்டு போனை வாங்கி பேசுகிறார். உங்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என இனியா சொல்ல கோபி நானும் மிஸ் செய்கிறேன். அதனால் சாப்பிடாமல் ஸ்கூல் போகாமல் இருக்காதே என கோபி சொல்கிறார். எனக்கு உங்க நியாபகமாக தான் இருக்கிறது என இனியா சொல்ல, நான் நாளை ஸ்கூலிற்கு வந்து பார்க்குறேன் என கோபி சொல்கிறார்

மறுநாள் செழியன் வேலைக்கு கிளம்ப தாத்தா அம்மா என்ன சொன்னாங்க என கேட்கிறார். ஜெனி நான் அம்மாவிடம் சமாளித்து விட்டேன் என சொல்ல, தாத்தா அம்மா வந்து கேட்டதும் நான் பதறிவிட்டேன் என சொல்கிறார். அம்மாவிடம் யாரோ சொல்லி இருப்பாங்க போல என கேட்க நான் இனி இதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என சொல்லிவிட்டேன் என சொல்கிறார். பின் இனியா அம்மா எங்கே என கேட்க பாக்கியா என்ன ஆச்சு என கேட்கிறார். இனியா இன்னைக்கு பீஸ் கட்ட கடைசி நாள் என சொல்ல, இன்னைக்கு கட்டாமல் இருந்தால் என்னை வெளியே அனுப்பி விடுவார்கள் என இனியா சொல்கிறார்.

தமிழகத்தில் ஆகஸ்ட் 26ம் தேதி ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

சரி கட்டிவிடுகிறேன் எனக்கு முன்னாடியே தெரியாது இன்னைக்கே வந்து கட்டுறேன் என இனியா சொல்ல, ஆமாம் டாடியிடம் சவால் விட்ட தான அப்போ நீ தான் கட்ட வேண்டும் என சொல்கிறார். பின் எழில் அம்மா கட்டிவிடுவதாக சொன்னதாக சொல்ல, உனக்கு என்ன டாடி இருந்தால் எல்லாத்தையும் கட்டி விடுவார் இந்த நிலைமை எனக்கு வந்ததே இல்லை என இனியா அழுகிறார். தாத்தா அழாதே அதான் உன் அம்மா கட்டி விடுவதாக சொல்கிறார். எழில் இனியாவை கூப்பிட ஆனால் இனியா அழுது கொண்டே இருக்கிறார். இன்னைக்கு நீ கட்டாமல் இருந்தால் நான் ஸ்கூலிற்கு போகமாட்டேன் என இனியா சொல்ல அதெல்லாம் ஒன்றும் ஆகாது என ஜெனி சொல்லி ஸ்கூலிற்கு கிளம்ப சொல்கிறார்.

கோபி இல்லாத அருமை இப்பவாவது புரிகிறதா என பாப்போம் என ஈஸ்வரி சொல்ல, பாக்கியா அதை நினைத்து கவலைப்படுகிறார். மறுபக்கம் செல்வி பாக்கியாவிடம் பணத்திற்கு என்ன செய்ய இருக்கிறாய் என கேட்க அப்போது ராமமூர்த்தி வந்து என்ன பேசிக் கொண்டு இருந்தீங்க என கேட்கிறார். பீஸ் பற்றி பேசியதாக செல்வி சொல்ல, எவ்வளவு பணம் வேண்டும் என தாத்தா கேட்கிறார். பாக்கியா அதெல்லாம் வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்ல, ஈஸ்வரி அவள் தான் பார்த்து கொள்வாள் என குத்தி காட்டி பேச காசு என்னால் கட்ட முடியும் என பாக்கியா சொல்கிறார். அதெல்லாம் கட்டுவாய் ஆனால் இப்போது பணத்திற்கு என்ன செய்வாய் 47 ஆயிரம் பெரிய தொகை என தாத்தா சொல்கிறார். பின் ஈஸ்வரி பீஸ் மட்டுமா இன்னும் நிறைய வேலை இருப்பதாக சொல்ல, தாத்தா என்னிடம் பணம் இருக்கிறது என சொல்கிறார். ஈஸ்வரி இப்படி எல்லாத்தையும் நீங்க செய்தால் அவளுக்கு எப்படி வலி தெரியும் என கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!