விவகாரத்தை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, வீட்டு செலவை பார்க்கமாட்டேன் என சொன்ன செழியன் – இன்றைய எபிசோட்!

1
விவகாரத்தை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, வீட்டு செலவை பார்க்கமாட்டேன் என சொன்ன செழியன் - இன்றைய எபிசோட்!
விவகாரத்தை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, வீட்டு செலவை பார்க்கமாட்டேன் என சொன்ன செழியன் - இன்றைய எபிசோட்!
விவகாரத்தை நினைத்து வருத்தப்படும் பாக்கியா, வீட்டு செலவை பார்க்கமாட்டேன் என சொன்ன செழியன் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா விவாகரத்து வாங்கியதை நினைத்து கவலைப்பட எழில் அவருக்கு ஆதரவாக இருக்கிறார். மறுபக்கம் செழியன் வீட்டு பொறுப்புகளை கவனிக்க மாட்டேன் என ஜெனியிடம் சொல்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா நல்ல வேளை நீ என்னுடன் இருந்தாய் என சொல்ல, எழில் நான் எப்போதும் உன்னுடன் தான் இருக்கேன் என சொல்கிறார். எனக்கு எதாவது ஒன்று என்றால் நீ வந்திருப்பாய் உனக்கு நான் தாத்தா, செல்வி ஜெனி என 4 பேர் துணையாக இருக்கோம், மற்றவர்கள் உன்னை புரிந்து கொள்ளாமல் இருக்கலாம் ஆனால் உன்னை குறை சொல்ல முடியாது என சொல்ல, பாக்கியா கல்யாணம் முடிந்த புதிதில் நாம சின்ன வீட்டில் இருந்தோம் முதலில் நன்றாக இருந்தது. ஆனால் அப்பறம் உன் அப்பாவிற்கு என்னை பிடிக்கவில்லை என தெரிந்தது.

அதற்குள் 3 குழந்தைகள், வீட்டில் நிறைய வேலை இருக்கும், இப்போது செல்வி வருகிறாள், அப்போது அது கூட இல்லை என சொல்ல, உன் அப்பா வந்து பாவம் இவ்வளவு வேலை செய்து இருக்கியா என கேட்பாரா என நினைப்பேன் ஆனால் அவரை பொறுத்தவரை பொண்டாடி என்றால் வீட்டு வேலைகளை செய்பவள். அவர் நினைத்தது வேற, ஒரு கட்டத்தில் என்னை மட்டம் தட்ட தொடங்கிவிட்டார். நானும் அதனை நம்ப தொடங்கிவிட்டேன். அவர் அப்படி தான் என சொல்ல, எழில் ரொம்ப கஷ்டம் தான் அம்மா என சொல்கிறார். ஆம்பளைங்களுக்கு சம்பாரிக்க வேண்டிய நிலை இருக்கிறது என சொல்கிறார்.

இப்போது கூட அவர் வருவாரா இல்லையா என என் எண்ணம் இருக்கிறது என சொல்கிறார். இவ்வளவு காலமாக இந்த வேலை எல்லாம் செய்து பழகி இப்போது குறையாக இருப்பதாக தெரிகிறது. வாசலில் அவர் வந்துவிட்டாரா என பார்க்க தோணுகிறது என சொல்கிறார். நமக்கு சொந்தமான ஒன்னு போவதை நினைத்து மனசு வருத்தப்படும், உனக்கு இப்போது அப்படி தான் இருக்கிறது எல்லாம் சரியாகிவிடும் என எழில் சொல்கிறார். அப்போ நான் எந்த தப்பும் செய்யவில்லையே என கேட்க, நீ செய்த ஒரே தவறு நீ கோபிநாத்தை திருமணம் செய்தது என சொல்கிறார். நீ வருத்தப்படாமல் தூங்கு என எழில் சொல்கிறார்.

மறுபக்கம் கோபி தனது நண்பருடன் காரில் இருக்க, கோபி பயங்கர கோவத்தில் இருக்கிறார். பின் கோபி எனக்கு இப்போது நம்ப வைத்து கழுத்தை அறுத்தது போல இருக்கிறது என சொல்கிறார். இதெல்லாம் நன்றாக பேசு ஆனால் வாழ்க்கையில் கோட்டை விட்டுவிடு என சொல்கிறார். எனக்கு எதாவது ஐடியா கொடு என சொல்ல எனக்கு எதுவும் தோன்றவில்லை என சொல்கிறார். என்னால் நம்பமுடியவில்லை இத்தனை வருஷம் பூனைக்குட்டி போல இருந்துவிட்டு இப்போது இப்படி எப்படி செய்வாள் என கேட்கிறார்.

TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – அரசு சார்பில் இலவச பயிற்சி!

எல்லாரையும் கைக்குள் வைத்து கொண்டு அவள் இப்படி செய்துவிட்டாள் என சொல்கிறார். பொம்பளைங்க அதற்காக கண்ணீரை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் என சொல்கிறார். கோபியின் நண்பர் சரி விடு என சொல்கிறார். பின் இனியா அழுது கொண்டே கோபிக்கு போன் செய்கிறார். எப்படி இருக்கீங்க என கேட்க கோபி எப்படி இருக்கமா சாப்பிட்டியா என கேட்கிறார். நான் சாப்பிட்டேன் இங்கே எல்லாரும் இருக்காங்க என சொல்ல, நீங்க சாப்பிட்டீங்களா என கேட்கிறார். பின் இனியா நீங்க இங்கையே இருக்கலாம் நான் உங்களை மிஸ் செய்கிறேன் என சொல்கிறார், நான் சீக்கிரம் வரேன் நீ நன்றாக படிக்க வேண்டும் என கோபி சொல்கிறார்.

சீக்கிரம் இந்த பிரச்சனை தீர்ந்ததும் எனக்கும் ராதிகாவிற்கும் கல்யாணம் நடந்ததும் நான் இனியாவை கூட்டிக் கொண்டு செல்வேன் மயூராவும் அவளும் அக்கா தங்கை போல இருப்பார்கள் என கோபி சொல்ல, கோபியின் நண்பர் பார்க்கலாம் இப்போது நீ அமைதியாக இரு என சொல்கிறார். மறுபக்கம் செழியன் கோபியை நினைத்து வருத்தப்பட, அம்மா ஏன் இந்த அளவிற்கு மோசமாக இருக்காங்க என தெரியவில்லை என சொல்கிறார். யார் சொல்வதும் கேட்காமல் அம்மா விவாகரத்து வாங்கிவிட்டு அப்பாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டாங்க என்ன அநியாயம் இது என செழியன் சொல்கிறார்.

பின் ஜெனி ஆன்டி அனுப்பவில்லை, அங்கிள் நினைத்தால் இங்கே இருந்திருக்கலாம் என சொல்கிறார். தாத்தா தான் வெளியே போக சொல்ல, அம்மா தான் வருத்தமாக பேசி எல்லா திட்டத்தையும் செய்து இருக்கிறார் என செழியன் சொல்கிறார். பின் செழியன் அப்பா மீது தவறு இருக்கிறது. ஆனால் அம்மா குடும்பத்தை பிரித்துவிட்டதாக சொல்கிறார். பின் ஜெனி, ஆன்டி அப்படி நினைக்கவில்லை என சொல்ல, இனியாவிடம் அம்மா வேண்டுமா? அப்பா வேண்டுமா? என கேட்டது யாரு, எல்லாரும் கெஞ்சியும் அவங்க பேசியதை பார்த்தியா அம்மாவை எனக்கு பிடிக்கவே இல்லை.

இனிமேல் அப்பா வரமாட்டாங்களா, இனிமேல் இந்த குடும்பத்திற்கு யார் பணம் கொடுப்பா வீட்டில் 8 பேர் இருக்கோம் அம்மா சமாளித்துவிடுவார்களா என கேட்க, செலவாவது சரி தான் அவங்க மற்றவர்களை போல இல்லை என ஜெனி சொல்கிறார். அம்மா உழைப்பது எல்லாம் சரியாக வராது, அப்பாவிற்கு அடுத்ததாக நான் தான் சம்பாரிக்கிறேன். இங்கே மொத்த செலவிற்கு என்னிடம் கேட்டால் நான் கொடுக்கமாட்டேன் நாம இருவருக்கு மட்டும் தான் நான் பணம் கொடுப்பேன் என சொல்ல. அப்பா இல்லை என்றால் நீ தான் எல்லா செலவு செய்ய வேண்டும் என ஜெனி சொல்ல, அதெல்லாம் முடியாது என செழியன் சொல்கிறார். ஜெனி பாக்கியாவிற்கு ஆறுதலாக பேச, ஆனால் இனி இப்படி பேசினால் நாம இந்த வீட்டில் இருக்க கூடாது என செழியன் சொல்கிறார். பின் செழியன் ஆபிஸ் கிளம்ப பாட்டியிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். பின் நீ தான் குடும்பத்தை பார்த்து கொள்ள வேண்டும் என சொல்ல, ஜெனி அதெல்லாம் பார்த்துக் கொள்வார் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. In this status Radhika should marry Gopi and take revenge of him for the sake of Bhagya and entire family. Because he is the only. Culprit in this story or serial. Knowingly he has done this to Bhagya and Radhika. He must be punished. Radhika can only do this. Then only he and his supporters in family will know about him. Cunning and culprit fellow Gopi.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!