பாக்கியாவை வார்த்தைகளால் காயப்படுத்திய கோபி, ராதிகாவை சந்தித்து கல்யாணம் பற்றி முடிவெடுக்க சொன்ன கோபி – இன்றைய எபிசோட்!

0
பாக்கியாவை வார்த்தைகளால் காயப்படுத்திய கோபி, ராதிகாவை சந்தித்து கல்யாணம் பற்றி முடிவெடுக்க சொன்ன கோபி - இன்றைய எபிசோட்!
பாக்கியாவை வார்த்தைகளால் காயப்படுத்திய கோபி, ராதிகாவை சந்தித்து கல்யாணம் பற்றி முடிவெடுக்க சொன்ன கோபி - இன்றைய எபிசோட்!
பாக்கியாவை வார்த்தைகளால் காயப்படுத்திய கோபி, ராதிகாவை சந்தித்து கல்யாணம் பற்றி முடிவெடுக்க சொன்ன கோபி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபியை மீறி பாக்கியா விவாகரத்து வாங்கியதால் அதை நினைத்து கோபி பயங்கர கோவத்தில் பாக்கியாவிடம் பேசுகிறார். ஆனால் பாக்கியா பதிலுக்கு ஒன்றும் பேசாமல் இருக்கிறார். பின் ராதிகாவை சந்தித்து எனக்கு விவாகரத்து கிடைத்துவிட்டது இனி நீ தான் முடிவு செய்ய வேண்டும் என சொல்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் அன்னைக்கு என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என எல்லார் முன்னடியும் கத்துனீயே யார் ஏமாளி நான் தான் ஏமாளி, இத்தனை வருஷம் 10 சதவிகிதம் ஒற்றுமை இல்லாமல் குடும்பம் நடத்தி இருக்கேனே யார் ஏமாளி நான் தான் ஏமாளி என கோபி சொல்கிறார். உனக்கு என்னை பிடிக்கவில்லையே அதனால் தான் நான் விவாகரத்து என சொன்னதும் குதித்து கொண்டு வந்தியா என கேட்கிறார். அப்போ ஏன் இத்தனை நாளாக சொல்லவில்லை,உன் மீது அனுதாபம் வர வேண்டும் என நினைத்தாயா என கோபி கேள்வி கேட்க எழில் அப்பா நீங்க பேசுவது சரி இல்லை என சொல்கிறார்.

பாக்கியா எழிலை பேசாமல் இருக்க சொல்கிறார். இவளை எனக்கு பிடிக்கவில்லை, ஆனால் அதற்காக இவளுக்கு எதாவது குறை வைத்தேனா, நான் செய்த ஒரு தவறை வைத்து கொண்டு என்னை கேவலமாக நினைக்க வைத்துவிட்டாள் என சொல்கிறார். இதெல்லாம் நீ திட்டமிட்டு செய்து இருக்கிறாய், ஆனால் இனிமேல் அந்த வீட்டிற்குள் கால் எடுத்து வைத்தால் நடப்பதே வேற என கோபி திட்டிவிட்டு கிளம்புகிறார். தூரமாக சென்று பாக்கியாவை பார்க்க அவர் எந்த பதட்டமும் இல்லாமல் நிற்கிறார். எழில் அவர் இப்படி பேசுகிறார் நீ ஏன் அமைதியாக இருக்கிறாய் என கேள்வி கேட்க, பாக்கியா உரிமை இருப்பவரிடம் தான் நாம பேச வேண்டும் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இன்னும் அவர் எவ்வளவு நேரம் பேசி இருந்தாலும் நான் அமைதியாக தான் இருப்பேன் என பாக்கியா சொல்கிறார். அவர் என்ன தியாகி மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார் என எழில் கேட்க, பேசினால் பேசட்டும் என சொல்கிறார். உன்னை பார்த்தால் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது, திடீரென விவாகரத்து கிடைக்கிறது. நீ என்னமோ ஞானி போல பேசுகிறாய் என கேட்க, எழில் எங்கே போவது என கேட்கிறார். பாக்கியா எங்கையாவது போ என சொல்ல, எழில் வண்டியை எடுத்து கொண்டு கிளம்புகிறார். மறுபக்கம் ராதிகாவிடம் மயூராவின் உடல்நிலை பற்றி கேட்க, காய்ச்சல் இல்லை ஆனால் உடம்பெல்லாம் நடுங்குகிறது என ராதிகா சொல்கிறார்.

பின் ராதிகாவின் அண்ணன் மும்பை போறது பற்றி என்ன முடிவு செய்து இருக்கிறாய் என கேட்க இந்த நேரத்தில் விமானத்தில் பயணம் செய்வது சரி இல்லை என சொல்கிறார். கண்டிப்பாக மும்பை போறியா என சந்துரு கேட்க இன்னைக்கு அவரின் விவாகரத்து கேஸ் என ராதிகா சொல்கிறார். கேஸ் இருந்தால் என்ன மும்பை போறியா இல்லையா என கேட்க, சும்மா நியாபகப்படுத்தினேன் நான் மும்பை போக தான் இருக்கிறேன் என சொல்கிறார். பின் சந்துரு மயூராவின் படிப்பு முக்கியம் என சொல்ல, ராதிகா நாங்க கிளம்பிருவோம் இல்லை, என்றால் அந்த குடும்பத்தில் நிறைய பிரச்சனை வரும் என சொல்கிறார்.

சந்துரு, கோபி மீது தான் தவறு இருக்கிறது ஆனால் எல்லா தவறையும் உன் மீது போடுவது சரியா என கேட்கிறார். நான் சொல்வதை இவள் கேட்கவே இல்லை என ராதிகாவின் அம்மா சொல்ல, மயூராவின் உடல் நிலை சரியானதும் நான் கிளம்பிடுவேன் என சொல்கிறார். மறுபக்கம் பாக்கியா நடப்பதை எல்லாம் பார்த்து உனக்கு கஷ்டமாக இருக்கிறதா என எழிலிடம் கேட்க, அதெல்லாம் இல்லை என எழில் சொல்கிறார். இப்படி எல்லாம் செய்வதால் உனக்கு என்னை பிடிக்கவில்லையா என கேட்க இப்போ தான் உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என சொல்கிறார். பின் எழிலை ஹோட்டல் போக சொல்லி பாக்கியா சொல்கிறார்.

மறுபக்கம் ராதிகாவை பார்க்க கோபி வருகிறார். கோபி வந்திருப்பதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைகிறார். பின் அவர் எதுவும் பேசாமல் இருக்க கோபி, மயூராவின் உடல்நிலை பற்றி கேட்கிறார். ராதிகாவின் அம்மா பரவாயில்லை என பதில் சொல்கிறார். பின் கோபி விவாகரத்து நோட்டீசை காட்டுகிறார். அதை பார்த்து ராதிகா அதிர்ச்சி அடைய கோபி இரண்டாவது முறை போன போது எனக்கும் பாக்கியாவிற்கும் விவாகரத்து கிடைத்துவிட்டது என சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

காமன்வெல்த் போட்டியில் இந்தியா மீண்டும் அசத்தல் – மும்முறை தாண்டுதலில் இன்று 2 பதக்கம்!

பாக்கியா முழு மனதுடன் விவாகரத்து கொடுத்துவிட்டாள் என கோபி சொல்ல, ஆனால் அதை தடுத்துவிடுவீர்கள் என நான் நினைத்தேன் என ராதிகா சொல்ல, ஆமாம் நினைத்தேன் ஆனால் எனக்கு முன்னாடி சென்று அவள் விவாகரத்து கேட்டாள் அதனால் நானும் கொடுத்துட்டேன் என சொல்கிறார். பின் கோபி இப்போது தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது என சொல்கிறார். வீட்டில் எல்லாரும் தடுத்தும் அவள் கேட்கவில்லை, அவளுக்கு இவ்வளவு இருந்தால் எனக்கு என்ன என கோபி கேட்கிறார். இந்த விவாகரத்து யாருக்காக வாங்கினேன் என உனக்கு தெரியும் உன் மீது நான் அவ்வளவு அன்பு வைத்திருக்கேன். நீ மட்டும் இல்லை மயூரா மீதும் நான் அன்பு வைத்திருக்கேன். இனி எந்த குழப்பமும் இல்லாமல் உங்களுடன் இருப்பேன், இனி நீ தான் முடிவு செய்ய வேண்டும் என கோபி சொல்கிறார்.

மறுபக்கம் ஈஸ்வரி ராதிகாவிடம் சண்டை போட்டதை சொல்லி தாத்தா திட்டுகிறார். 4 சுவற்றிற்குள் இருந்த விஷயத்தை இப்போது எல்லாருக்கும் தெரியபடுத்திவிட்டாய் என கேட்கிறார். அவள் கோபி உடன் ஊர் சுற்றியது எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது என சொல்ல, செழியன் பாட்டி செய்தது தவறு தான் என சொல்கிறார். பின் ஈஸ்வரி கல்யாணம் முடிந்த ஒருவனுடன் அவள் எதற்கு பழகினாள் என கேட்கிறார். உடனே ஜெனி, அங்கிள் ஆன்டி என்ன முடிவு செய்திருப்பார்கள் என நாம் சென்று பார்க்க வேண்டும் என சொல்ல, ஈஸ்வரி அவங்க தான் விவாகரத்து வாங்க சென்றுவிட்டார்களே என சொல்ல, இனியா அப்போ இந்த வீட்டில் யார் இருப்பா அம்மாவா அப்பாவா என கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!