காமன்வெல்த் போட்டியில் இந்தியா மீண்டும் அசத்தல் – மும்முறை தாண்டுதலில் இன்று 2 பதக்கம்!

0
காமன்வெல்த் போட்டியில் இந்தியா மீண்டும் அசத்தல் - மும்முறை தாண்டுதலில் இன்று 2 பதக்கம்!
காமன்வெல்த் போட்டியில் இந்தியா மீண்டும் அசத்தல் - மும்முறை தாண்டுதலில் இன்று 2 பதக்கம்!
காமன்வெல்த் போட்டியில் இந்தியா மீண்டும் அசத்தல் – மும்முறை தாண்டுதலில் இன்று 2 பதக்கம்!

22-வது காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களைப் வென்று குவித்து வருகிறது. மேலும் காமன்வெல்த் மும்முறை தாண்டுதலில் இன்று இந்தியா 2 பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் போட்டி:

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மேலும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1930-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டை போல காமன்வெல்த் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் 2018-ம் ஆண்டு நடைபெற்றது.

TNPSC குரூப் 1 தேர்வை குறித்த பயம் இனி யாருக்கும் வேண்டாம் – முக்கிய அறிவிப்பு!

காமன்வெல்த் போட்டியில் இந்தியா 9 தங்கம் 9 வெள்ளி 9 வெண்கல பதக்கம் உட்பட 26 பதக்கங்களுடன், பட்டியலில் 5 வது இடம் வகித்து வந்தது. அதாவது ஆடவருக்கான 74 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்தியாவின் நவீன், பாகிஸ்தான் வீரர் முகமது ஷெரீஃபை எதிர்கொண்டார். இதில் 9-0 என்ற கணக்கில் முகமது ஷெரீப் தாஹிரை வீழ்த்திய நவீன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அதேபோல், மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கம் வென்றார்.

மேலும் இலங்கையின் சாமோத்யா கேஷானி உடன் மோதிய வினேஷ் போகத், ஆட்டத்தின் தொடக்கம் முதலே அடுத்தடுத்து புள்ளிகளை குவித்தார். இதன் மூலம் அவர் எளிதாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீத்து கங்காஸ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்நிலையில், காமன்வெல்த் மும்முறை தாண்டுதல் போட்டியில் இன்று இந்தியாவின் எல்தோஸ் பால் தங்கப்பதக்கமும், அப்துல்லா அபுபக்கர் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர்.

Exams Daily Mobile App Download

இதையடுத்து இன்று நடைபெற்ற பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீத்து காங்காஸ் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இங்கிலாந்து வீராங்கனைக்கு எதிரான போட்டியில் நீத்து கங்காஸ் 5-0 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அதேபோல், ஆண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் இந்தியா 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!