ஆயுத பூஜையினை விமர்சையாக கொண்டாடிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குழு – வைரலாகும் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் ஆயுத பூஜையினை கொண்டாடினர். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்
விஜய் டிவியில் தற்போது கடந்த சில வாரங்களாக டாப் ரேட்டிங்கில் இருந்து வந்த சீரியல் தான், பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்வதற்கு காரணம், அந்த சீரியலின் கதைக்களம் மற்றும் நடிகர், நடிகைகளின் இயல்பான நடிப்பும் தான். தற்போது இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்து வந்த காட்சியான தனத்திற்கு குழந்தை பிறந்து விட்டது. அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
வெண்பாவை மிரட்ட பேயாக மாறிய கண்ணம்மா – ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிய ட்விஸ்ட்!
கூடுதல் தகவலாக, கண்ணன் தான் தனத்திற்கு பிரசவம் பார்க்க மிகவும் உதவியாக இருக்கிறார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனைவருக்கும் தகவல் அளித்து கடைசி வரை பார்த்து கொள்கின்றனர். அதே போல் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் குடும்பத்தில் எப்படியாவது சேர்ந்து கொள்ள வேண்டும் என்று பல முயற்சிகளையும் செய்து வருகின்றனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தனம் அண்ணிக்கு பிறந்த ஆண் குழந்தை – மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!
இதனால் அடுத்து வரும் நாட்களில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் குடும்பத்தில் சேர்த்து கொள்வார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இப்படியாக சீரியல் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் வேளையில், அனைவரும் விமர்சையாக கொண்டாடும் ஆயுத பூஜை விழாவினை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் குழுவினரும் கொண்டாடி உள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. ரசிகர்களும் சீரியல் குழுவினருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.