தமிழக அரசு ஊழியர்களுக்கு செக் … மார்ச்சில் வரும் புதிய மாற்றம்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு செக் ... மார்ச்சில் வரும் புதிய மாற்றம்!

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வருமான வரியை ஊதியத்தில் தானாகவே பிடிக்கும் வசதி மார்ச் முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

 மார்ச் முதல் அறிமுகம்;

வருமான வரியை ஊழியரை தோராயமாக முடிவு செய்து மாதம் தோறும் பிடித்தம் செய்ய ஊதியம் பெற்று வழங்கும் அலுவலகம் தெரிவிப்பர். பலர் பிடித்தமே செய்யாமல் டிசம்பர், ஜனவரி & பிப்ரவரி மாதங்களில் மட்டும் பிடித்தம் செய்வர். சிலர் ஊதியத்திற்கு மேல் வரி வரும் சூழலில் தனியாக ஆன்லைன் அல்லது வங்கி செலான் மூலம் பிப்ரவரியில் வரி செலுத்துவர். இந்த முறையை தடுப்பதற்காக அரசு பல்வேறு  முயற்சிகளை எடுத்து வருகிறது. இதை பின்பற்றாத பல ஊழியர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுவது வழக்கம்.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் – உடனே விண்ணப்பிக்க!

இந்த சிக்கல்களை முழுமையாக தவிர்க்கும் போட்டு வரும் வரி ஆண்டு முதல் ஊதியத்திற்கு ஏற்ப வருமான வரியானது மாதாந்திர தவணை அடிப்படையில் தானாகவே பிடித்தம் செய்யப்படும் வசதி தமிழக அரசின் IFHRMS (களஞ்சியம்)ல்  நடைமுறைக்கு வர உள்ளது இதன்படி வரும் ஆண்டு முதல் மொத்த ஊதியத்தை வைத்து ஊழியர்களுக்கான வருமான வரி எவ்வளவு என்பதை தோராயமாக மென்பொருளேகணக்கீடு செய்து அதிலிருந்து மாதாந்திர தவணையை மதிப்பீட்டு மாதாந்திரம் தானாக பிடித்தம் செய்து விடும்.  மேலும் ஊதிய உயர்வு மற்றும் அகவிலை உயர்வு போன்ற உயர்வின் போது அதற்கு ஏற்ப வரியில் மாற்றம் ஏற்படும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!