ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்க்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்க்கு கொரோனா தொற்று உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்க்கு கொரோனா தொற்று உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி!
ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்க்கு கொரோனா தொற்று உறுதி – ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் மற்றும் BBL லீக் தொடரின் மெல்போர்ன் ஸ்டாரின் கேப்டனுமான க்ளென் மேக்ஸ்வெல்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ரசிகர்கள் அதிர்ச்சி:

ஆஸ்திரேலியாவில் தற்போது பிக் பேஷ் T20 போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகள் கோவிட் விதிமுறைகளுடன் பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. இந்த BBC போட்டிகளில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் மெல்போர்ன் ஸ்டார் அணிக்கு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டு சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அந்த அணியில் ஏற்கனவே 13 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜன.6 முதல் அமலுக்கு வரும் மினி லாக்டவுன்? அரசுக்கு கோரிக்கை!

இதை தொடர்ந்து மேக்ஸ்வெல் இன்று காலை கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்படும் RT-PCR பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவு வெளிவரும் வரை மேக்ஸ்வெல் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். பிக் பேஷ் லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியில் அதிகமான வீரர்கள் பாதிக்கப்பட்டனர். ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற்ற மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வெல் விளையாடியதால் அவருக்கு பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டது.

Post Office செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் முக்கிய அறிவிப்பு – தேசிய அளவில் தமிழகம் இரண்டாம் இடம்!

8 வீரர்களோடு RT-PCR பரிசோதனை செய்த மேக்ஸ்வெல்க்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டதும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். BBL தொடரில் அதிக வீரர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால் தொடரை தள்ளி வைக்க அவ்வாரியம் ஆலோசித்து வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here