நடப்பு நிகழ்வுகள் – 9 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 9 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 9 ஆகஸ்ட் 2023

நடப்பு நிகழ்வுகள் – 9 ஆகஸ்ட் 2023

தேசிய செய்திகள்

இ-வாணிப ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் குஜராத் மாநில அரசாங்கத்துடன் அமேசான் நிறுவனமானது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

  • அமேசான் இந்தியா நிறுவனமானது 08 ஆகஸ்ட் 2023 அன்று குஜராத் மாநிலத்திலிருந்து இ-வாணிப ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் குஜராத் மாநில அரசாங்கத்தின் தொழிற்துறை மற்றும் சுரங்கத் துறையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • அமேசான், சூரத், பருச், அகமதாபாத், வதோதரா மற்றும் ராஜ்கோட் போன்ற முக்கிய MSME (குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்) அமைப்புகளிலிருந்து ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான பயிற்சி, திறன் மேம்பாட்டிற்கான பட்டறைகளை உருவாக்குதல் மற்றும் அதனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் சேவைகளுக்கு இடையேயான அமைப்பு(கட்டளை மற்றும் ஒழுக்கம்) மசோதா – 2023 ஆனது நிறைவேற்றப்பட்டுள்ளது.

  • சேவைகளுக்கு இடையேயான அமைப்பு(கட்டுப்பாடு, கட்டளை மற்றும் ஒழுக்கம்) மசோதா – 2023க்கு நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை ஆகஸ்ட் 08 அன்று ஒப்புதல் அளித்தது. மேலும் இந்த மசோதாவானது ஏற்கனவே மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • இந்த மசோதாவானது பொது மற்றும் தனியார் சேவை நிறுவனங்களுக்கு இடையேயான அதிகாரிகளுக்கு, ஒழுங்கு மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டைப் முக்கியமாக பயன்படுத்த இந்த மசோதாவானது அதிகாரம் அளிக்கிறது.

பாரதிய வஸ்த்ரா ஏவம் ஷில்பா கோஷ் வலைத்தளமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • பிரதமர் திரு மோடி, ஆகஸ்ட் 07 அன்று தேசிய தலைநகரமான புது டெல்லியில் உள்ள மாபெரும் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் 9ஆவது தேசிய கைத்தறி தின கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கிய நிலையில் தேசிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘பார்த்திய வஸ்த்ரா ஏவம் ஷில்பா கோஷ் – என்ற ஜவுளி மற்றும் கைவினைகளின் களஞ்சியம்’ என்ற வலைத்தளத்தை (இ-போர்ட்டலைத்) தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த வலைத்தளமானது ஜவுளி மற்றும் கைவினைப் பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகள், முனைவர் பட்ட ஆய்வறிக்கைகள், வழக்கு ஆய்வுகள், ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவற்றை தேவைப்படும் தொழில்முனைவோர்களுக்கு உதவும் வகையில் இந்த வலைத்தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளதாகும்.

சர்வதேச செய்திகள்

நாட்டின் சர்ச்சைக்குரிய டிஜிட்டல் பாதுகாப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளது.

  • நாட்டின் சர்ச்சைக்குரிய டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டத்தை(டிஎஸ்ஏ) மறுவடிவமைப்பதற்காக வங்கதேச அரசாங்கமானது முடிவு செய்துள்ளதாகவும் சில “அவதூறு குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை” போன்ற சில முக்கிய கடுமையான விதிகளை அரசாங்கம் ரத்து செய்துள்ளதாகவும் அந்நாட்டின் மத்திய சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் 07 ஆகஸ்ட் 2023 அன்று அறிவித்துள்ளார்.
  • நாட்டின் பிரதம மந்திரி ஷேக் ஹசீனா அமைச்சரவையானது புதிய சட்டத்திற்கு கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் நிகழும் சில சைபர் குற்றமானது குறைய அதிக வாய்ப்புள்ளதாகவும் அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

100% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை உருவாக்கும் நோக்கத்தில் நியூசிலாந்து நாடானது BlackRock நிறுவனத்துடன் இணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது.

  • உலகின் முதல்முறையாக நாடுகளில் அதன் மின்சார கட்டத்தை முழுமையாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் முறைக்கு மாற்றுவதற்காக நியூசிலாந்து நாட்டின் அரசாங்கமானது ஆகஸ்ட் 08 அன்று அமெரிக்க முதலீட்டு பிளாக்ராக் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • காற்று, நீர்சார் மற்றும் சூரிய மின் உற்பத்தி அத்துடன் சேமிப்பு மற்றும் பச்சை ஹைட்ரஜன் ஆகியவற்றில் நாட்டின் மின்சார முறைகளை புதுப்பிக்கும் நோக்கத்துடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநில செய்திகள்

குஜராத் மாநில அரசானது “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ODOP)” என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது.

  • குஜராத் மாநில அரசாங்கமானது தனது உள்நாட்டு தயாரிப்புகளை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்துவதற்காக 58 கோடி ரூபாய் மானிய மதிப்பீட்டளவில் “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு (ODOP)” என்ற திட்டத்தை ஆகஸ்ட் 07 2023 அன்று செயல்படுத்தியுள்ளது. 
  • குஜராத் மாநில கைவினைப் பொருட்கள் மற்றும் அதன் மேம்பாட்டுக் கழகம் (GSHHDC) இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தின் கிட்டத்தட்ட 21 மாவட்டங்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட “கைவினைப் பொருட்கள்” மற்றும் அத்துறையைச் சேர்ந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மேகாலயாவில் உள்ள இஞ்சி விவசாயிகளுக்கு உதவுவதற்காக பாரத்ரோஹன் நிறுவனமானது ஸ்மார்ட் வில்லேஜ் திட்டத்தின் கீழ் இணைந்துள்ளது.

  • வேளாண்சார் (அக்ரி-டெக்) ட்ரோன் சேவைகளில் முன்னோடி பாரத்ரோஹன் நிறுவனமானது, ஸ்மார்ட் வில்லேஜ் இயக்கத்துடன் மேகாலயா மாநிலத்தில் உள்ள இஞ்சி விவசாயிகளுக்கு உதவுவதற்காக, இணைந்து செயல்படுவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆகஸ்ட் 2023 இல் கையெழுத்திட்டுள்ளது. 
  • இந்த ஒத்துழைப்பானது மேகாலயாவின் இஞ்சி விவசாயத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் பயிர் இழப்புகளைக் முற்றிலும் குறைத்து அவர்களின் வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டமானது வரும் காலங்களில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Photo with the farmers and BharatRohan team during the drone survey

6,134 கோடி ரூபாய் மதிப்பீட்டளவில் அணை கட்ட ஹரியானா மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

  • ஹரியானா மாநில அரசாங்கமானது 6,134 கோடி ரூபாய் மதிப்பீட்டளவில்  14 கிமீ நீளமுள்ள அணையை கட்ட திட்டமிட்டுள்ளதாக தனது சமீபத்திய அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. 
  • மேலும் இது யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையிலிருந்து கிட்டத்தட்ட 4.5 கிமீ மேல்புறத்தில் கட்டப்படும் என்றும் இத்திட்டம் முடிவடைந்தவுடன், சுமார் 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் இதன் மூலம் பாசன நீர் மற்றும் மீன்வளர்ப்பு ஆகியவை மாநிலத்திற்கு அதிக அளவில் கிடைக்கும் வகையிலான வருமானத்தினை ஈட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் டெஸ்லா நிறுவனத்தின் CFO ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • பிரபல டெஸ்லா நிறுவனம் இந்தியாவை அதன் அடுத்த முக்கிய ஆதாரமாக புதிய விநியோகிக்கும் சுற்றுச்சூழல் அமைப்பாக மாற்ற திட்டமிட்டுள்ளதால், அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக (CFO) வைபவ் தனேஜாவை (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்)நியமித்துள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • நீண்ட காலமாக இந்திய அரசாங்கத்திற்கும் டெஸ்லா நிறுவனத்திற்கும் இடையே தனது மின்னணு பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் சங்கிலி அமைப்பை எதிர்காலத்தில் நாட்டிற்கு கொண்டு வருவதற்கான முன்னெடுப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ள சூழ்நிலையில் இந்த நியமனமானது இந்த முன்னெடுப்புகளுக்கு  உந்துதலாக அமையும் என தொழில்வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக நிபுணத்துவ மல்யுத்த அமைப்பானது(WPWH) அதன் விளம்பர தூதராக சங்ராம் சிங்கை நியமித்துள்ளது.

  • World Professional Wrestling Hub(WPWH) அமைப்பானது இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழில்முறை மல்யுத்த உலகில் தனது அற்புதமான முயற்சியை வெளிக்கொணர்வதற்கான நோக்குடன் திரு சங்ராம் சிங்கை அதன் விளம்பர தூதராக நியமித்துள்ளதாக தனது சமீபத்திய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
  • WPWH அமைப்பானது இந்திய மற்றும் சர்வதேச அளவிலான மல்யுத்த வீரர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்தவும், அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களிடமிருந்து புதிய நுணுக்கங்களை கற்றுக்கொள்ளவும், தேசிய மற்றும் சர்வதேச மாபெரும் விருதுகளை வெல்வதற்கான அவர்களின் கனவுகளைத் தொடரவும் ஒரு முக்கிய தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரிசா உயர்நீதிமன்றத்தின் புதிய மற்றும் 33ஆவது தலைமை நீதிபதியாக தலபத்ரா பதவியேற்றுள்ளார்.

  • ஒடிசா உயர்நீதிமன்றத்தின் புதிய மற்றும் 33வது தலைமை நீதிபதியாக சுபாசிஸ் தலபத்ரா ஆகஸ்ட் 08 அன்று பதவியேற்றுள்ளார். மேலும் இவருக்கு ஒடிசா மாநில ஆளுநர் பேராசிரியர் கணேஷி பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
  • இந்த நியமனத்திற்கு கொலீஜியம் கடந்த மாதம் பரிந்துரைத்ததை தொடர்ந்து இவர் நீதிபதி டாக்டர் எஸ் முரளிதரின் இந்த பதவியானது முடிவடைந்ததையடுத்து இந்த பதவிக்கு பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொல்லியல் ஆய்வுகள்

கீழடியில் நடைபெற்று வரும் சமீபத்திய அகழாய்வில் “பழங்கால எடை கல்லானது” ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

  • சிவகங்கை மாவட்டத்தின் கீழடியில் தற்போது நடைபெற்று வரும் 9 ஆம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ளும்போது அதில் குறிப்பிடத்தக்க “பழங்கால எடை கல்லானது” ஒன்று ஆகஸ்ட் 2023 இல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • இது அகழாய்வு மேற்கொள்ளும்போது கிட்டத்தட்ட 175 செ.மீ. ஆழத்தில் “XM19/3 என்ற அகழாய்வுக் குழியிலிருந்து” படிக கல்லால் செய்யப்பட்ட இந்த எடை கல்லானது கண்டெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விருதுகள்

“சூப்பர் பிராண்ட்ஸ் இந்தியா 2023” விருதை ரேகோல்டு நிறுவனமானது வென்றுள்ளது.

  • வெப்பமூட்டி துறை சார்ந்த தீர்வுகள் துறையில் முன்னணி நிறுவனமான Racold, மதிப்புமிக்க 2023 ஆம் ஆண்டிற்கான “Superbrands India” என்ற விருதை ஆகஸ்ட் 2023 இல் பெற்றுள்ளது.
  • இந்த அங்கீகாரமானது, துறை சார்ந்த தொழில்துறையில் மிகவும் நம்பகரமான அமைப்பாக அதன் நிலையை வலுப்படுத்துதல் மற்றும் விதிவிலக்கான தயாரிப்புகளை வழங்குதல் ஆகியவற்றிற்காக Racold இன் இடைவிடாத அர்ப்பணிப்பை சிறப்பிக்கும் வகையில் இந்த விருதானது வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AKS WebSoft நிறுவனமானது சிறந்த கைபேசி செயலி மேம்பாடு மற்றும் இணையதள மேம்பாடு பிரிவின் கீழ் விருதை வென்றுள்ளது.

  • AKS WebSoft நிறுவனமானது டெல்லி/NCR பிராந்தியத்தில் சிறந்த கைபேசி செயலி மேம்பாடு மற்றும் இணையதள மேம்பாடு ஆகிய பிரிவுகளில் அதன் விதிவிலக்கான மாபெரும் சாதனைகளுக்காக மதிப்புமிக்க “மிலேனியம் ப்ரில்லியன்ஸ்” விருதானது ஆகஸ்ட் 2023 இல் வழங்கப்பட்டுள்ளது.
  • புகழ்பெற்ற பாலிவுட் நடிகரான, மலைக்கா அரோரா, இந்த விருதை AKS  நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். புதுமையான அணுகுமுறை மற்றும் துறையில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில் இந்த விருதானது அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய தினம்

வெள்ளையனே வெளியேறு இயக்கம் நாள்

  • இந்தியாவில் ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவும், ஆங்கிலேயர்கள் “இந்திய நாட்டை விட்டு வெளியேறவும்” இந்தியாவின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டின் பிரகடனமாக இருந்த வெள்ளையனே வெளியேறு இயக்க தீர்மானத்தை நிறைவிவேற்றியதை நினைவு கூறும் வகையில் இந்த தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 08 ஆம் நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. 
  • இந்த நாளானது ஆகஸ்ட் கிராந்தி திவாஸ்/தினம் என்றும் நாடு முழுவதும் அழைக்கப்படுகிறது. மேலும் தேசிய ஒருங்கிணைப்புக்கான  தேசிய அளவிலான உரையாடல்கள் மற்றும் பிற நிகழ்வுகளுடன் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவத்தை நோக்கமாக கொண்டு இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.

நாகசாகி தினம் 

  • இரண்டாம் உலகப்போரின் கடைசி காலங்களில் ஆகஸ்ட் 9, 1945 அன்று ஜப்பான் நாட்டின் தொழில்நகரமான நாகசாகி மீது அமெரிக்காவால் வீசப்பட்ட அணுகுண்டினால் 74,000 – 80,000 நபர்கள் கொல்லப்பட்டனர். இந்த துயர சம்பவத்தால் கொல்லப்பட்ட நபர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 09 ஆம் நாளானது நாகசாகி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • நாகசாகியில் வீசப்பட்ட இந்த அணுகுண்டுக்கு ‘ஃபேட் மேன்’ என்ற குறியீட்டுப் பெயர் வைக்கப்பட்டுள்ளது மற்றும் இதற்கு முன்பாக ஆகஸ்ட் 06 ஆம் நாளானது ஹிரோஷிமா மீது இதே போன்ற துயர சம்பவம் நிகழ்த்தப்பட்டு வரலாற்றின் மறையா பக்கங்களை அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலக பழங்குடியின மக்களின் சர்வதேச தினம் 2023

  • உலகில் உள்ள அனைத்து பழங்குடியின மக்களின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும், அவற்றை பாதுகாப்பதற்காகவும் ஆர்க்டிக் பிராந்தியத்தில் உள்ள இன்யூட் முதல் வட ஆப்பிரிக்க பிராந்தியத்தில்  உள்ள டுவாரெக் வரையிலான பழங்குடி இனங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் நாளானது உலக பழங்குடியின மக்களின் சர்வதேச தினமாக கொண்டாடப்படுகிறது.
  • மேலும் டிசம்பர் 23, 1994 அன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது அதன் தீர்மானம் 49/214 யின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 ஆம் நாளானது உலக பழங்குடியின மக்களின் சர்வதேச தினமாக அனுசரிக்கப்படும் என்று அங்கீகரித்துள்ளது.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!