58% இடஒதுக்கீடு முறை சத்தீஸ்கரில் அமல் – முதல்வர் திட்டம் !

0
58% இடஒதுக்கீடு முறை சத்தீஸ்கரில் அமல் - முதல்வர் திட்டம் !
58% இடஒதுக்கீடு முறை சத்தீஸ்கரில் அமல் - முதல்வர் திட்டம் !
58% இடஒதுக்கீடு முறை சத்தீஸ்கரில் அமல் – முதல்வர் திட்டம் !

சத்தீஸ்கர் மாநிலத்தில் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி 58 சதவீத மாணவர் சேர்க்கை இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இட ஒதுக்கீடு:

மத்திய மற்றும் மாநில அரசுகள் கல்வி, பணி வாய்ப்பு போன்றவற்றில் குறிப்பிட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு முறையை பின்பற்றி வருகிறது. இந்த இட ஒதுக்கீடு முறைகளின் அடிப்படையிலேயே மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். சத்தீஷ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. கடந்த ஆண்டு சத்தீஸ்கர் மாநில அரசாங்கத்தால் நிறுவப்பட்ட மற்றும் பராமரிக்கப்படும் பொது சேவைகள்,பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான 58% இட ஒதுக்கீடு முறையை அறிவித்தது.

இந்தியாவில் 14.56 லட்சம் கோடி கடன் தள்ளுபடி – மத்திய அரசு தகவல்!

ஆனால் 1994 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பின் படி 50 சதவீதம் இட ஒதுக்கீடு உச்சவரம்பை மீறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று மாநில உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதன்படி உச்ச நீதிமன்றம் மே 1ஆம் தேதி அன்று இடைக்கால உத்தரவில் மாணவர் சேர்க்கையில் 58 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த அனுமதி அளித்தது, இதனை தற்போது கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் அமல்படுத்த மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!