வாட்ஸ் அப் யூசர்கள் கவனத்திற்கு – வரப்போகும் புதிய அப்டேட்! இனி குரூப் காலிங் செம்ம ஈஸி!

0
வாட்ஸ் அப் யூசர்கள் கவனத்திற்கு - வரப்போகும் புதிய அப்டேட்! இனி குரூப் காலிங் செம்ம ஈஸி!
வாட்ஸ் அப் யூசர்கள் கவனத்திற்கு - வரப்போகும் புதிய அப்டேட்! இனி குரூப் காலிங் செம்ம ஈஸி!
வாட்ஸ் அப் யூசர்கள் கவனத்திற்கு – வரப்போகும் புதிய அப்டேட்! இனி குரூப் காலிங் செம்ம ஈஸி!

உலகின் நம்பர் 1 தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப் மேன்மேலும் தகவல் பரிமாற்றத்தை எளிதாகும் வகையில் புதிய அப்டேட்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் வாட்ஸ் அப் கணக்கு தொடங்குவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வந்துள்ள புதிய அப்டேட் என்னவென்று இப்பதிவில் காண்போம்.

வாட்ஸ் ஆப்:

உலகில் அதிக அளவிலான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர். அதாவது சுமார் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் சேவையை பயன்படுவதாக புள்ளிவிவரங்கள் தகவல் தெரிவிக்கிறது. ஏனெனில் வாட்ஸ் அப் தங்களது பயனர்களின் தனியுரிமை காப்பதில் முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிதாக்கும் வகையில் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் வாட்ஸ் அப் குழுவின் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

முதலில் 256 நபர்கள் இருந்த நிலையில் தற்போது 512 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமை போல எமோஞ்சிகள் கொண்டு Reply செய்யும் வசதியும் வந்துள்ளது. மேலும் நீங்கள் ஆன்லைனில் இருப்பதை மறைத்து வைத்து கொள்ளும் வகையில் Setting-இல் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி Setting மெனுவில் கொடுக்கப்படும் ஆன்லைன் இண்டிகேட்டர் என்ற மெனுவை தேர்வு செய்து, அதில் நாம் ஆன்லைனில் இருக்கிறோம் என்பதை யாரெல்லாம் தெரிந்து கொள்ளலாம் என்பதை பயனர்களே முடிவு செய்யலாம்.

தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 73 லட்சம் பேர் பதிவு – முழு விவரம் வெளியீடு!

Exams Daily Mobile App Download

அதன் தொடர்ச்சியாக தற்போது வந்துள்ள புதிய அப்டேட்டின் படி இனி வாட்ஸ் அப் குரூப் காலில் 38 பேர் வரை இணைந்து பேசலாம். முதலில் அதிகபட்சமாக 8 பேர் மட்டும் குரூப் வாய்ஸ் காலில் இணைய முடியும். தற்போது இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது வரை இந்தியாவில் 49 கோடி மக்கள் வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் புதிய அப்டேட் வெளியானால் மேலும் பயனர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!